மாணவர்களுக்குத் தடுப்பூசி அவசியம்: மலேசிய அமைச்சர் அறிவுறுத்து

மாணவர்களுக்குத் தடுப்பூசி அவசியம்: மலேசிய அமைச்சர் அறிவுறுத்து

1 mins read
5fc182de-c684-41ce-9fe2-8aae7bf01bdf
-

கோலாலம்பூர்: மலேசியாவில் பள்ளிக்கூடம் திறக்கப்படுவதற்குள் மாணவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார் பெண்கள், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ரினா முகமது ஹருண்.

பதின்ம வயது பிள்ளைகள் அதிகம் தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளதால் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசர தேவையானது என்று அவர் கூறினார்.

"மாணவர்கள் தொற்றுக்கு ஆளாக மாட்டார்கள் என்று சொல்ல முடியாது. பெரியவர்

களுக்குத் தடுப்பூசி போடும் பணி முடிவடைந்ததும், 12 முதல் 17 வயதுடைய பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போடப்படும் என்று நம்புகிறேன்.

"இந்த வயது பிள்ளைகள், பெரும்பாலும் பள்ளிக்குச் செல்பவர்கள். எனவே பள்ளித் திறக்கப்

படுவதற்கு முன் அல்லது பள்ளித் திறக்கப்பட்டவுடன் கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன் அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று நம்புகிறேன்," என்றார் அவர்.

12 முதல் 17 வயதுடைய பிள்ளைகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும் என்று சுகாதார தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா நேற்று முன்தினம் கூறியிருந்தார்.

இதற்கிடையே, பெற்றோர் கிருமித்தொற்றுக்குப் பலியானதால் சுமார் 33 பிள்ளைகள் ஆதரவில்லாமல் இருக்கிறார்கள் என்றும் அவர் சொன்னார். அவர்

களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்படும் என்றும் வாழ்க்கையை எதிர்கொள்வது பற்றி அவர்களுக்குக் கலந்தாலோசனை வழங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

உறவினர்கள் விரும்பினால், பிள்ளைகள் அவர்களின் பாதுகாப்பில் விடப்படுவார்கள் இல்லையென்றால், அரசாங்க பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது.