ஜப்பானில் கனமழை; ஒருவர் பலி

ஜப்பானில் கனமழை; ஒருவர் பலி

1 mins read
78fa6d5f-3e3d-4550-afa0-657bab43169a
-
Google News Preferred Icon

தோக்கியோ: ஜப்பானின் நாகசாகியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் மாண்டார். காணாமற்போன இருவரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். சாகா, நாகசாகி, ஃபுகோமா ஆகிய மாநிலங்களில் அதிகபட்ச கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஹிரோஷிமாவிலும் மழை கொட்டித் தீர்க்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தேவையானவற்றைச் செய்துகொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டு உள்ளனர்.