ஹைட்டி நிலநடுக்கம்: நூற்றுக்கணக்கானோர் பலி

ஹைட்டி நிலநடுக்கம்: நூற்றுக்கணக்கானோர் பலி

2 mins read
38daf4aa-e391-4ba5-8746-652f9660d9aa
நிலநடுக்கத்தால் ஹைட்டியின் லெஸ் காயெஸ் நகரில் ஏற்பட்ட சேதம். படம்: இபிஏ -
multi-img1 of 2

ஹவானா(ஹைட்டி): ஹைட்­டியை உலுக்­கிய நில­ந­டுக்­கத்­தில் நேற்றிரவு ஒன்பது மணி நிலவரப்படி குறைந்தது 304 பேர் மாண்டுள்ளனர். குறைந்­தது 1,800 பேர் காய­முற்றனர். மேலும் பல­ரைக் காண­வில்லை.

7.2 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சில நில அதிர்வுகளும் உணரப்பட்டன.

தேவாலயங்கள், ேஹாட்டல்கள், வீடுகள் ஆகியவை இடிந்துவிழிந்து இடிபாடுகள் மட்டுமே மிஞ்சியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலை­ந­கர் போர்ட்-அவ்-பிரின்­சுக்­குச் சுமார் 150 கிலோ­மீட்­டர் தொலை­வில் உள்ள பகு­தி­யில் நில­ந­டுக்­கம் ஏற்­பட்­டது.

கியூபா, ஜமைக்கா ஆகிய நாடுகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.

11 ஆண்­டு­க­ளுக்கு முன்பு இதே­போல் வட, லத்­தீன் அமெ­ரிக்க கண்­டங்­களில் உள்ள ஆக ஏழை நாடான ஹைட்­டி­யில் ஏற்­பட்ட நில­நடுக்­கத்­தில் ஆயி­ரக்­க­ணக்­கானோர் பலி­யா­யி­னர்.

இந்த நில­ந­டுக்­கம் அதை­விட மோச­மா­ன­தாக இருக்­கக்­கூ­டும் எனக் கரு­தப்­ப­டு­கிறது.

ஹைட்டி நேரப்­படி நேற்று முன்­தி­னம் காலை எட்­டரை மணி­ய­ள­வில் நில­ந­டுக்­கம் ஏற்­பட்­டது. போர்ட்-அவ்-பிரின்­சில் நில­ந­டுக்­கம் உண­ரப்­பட்­டது.

ஆனால் அங்கு சேதம் அதி­கம் இல்லை எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

ஹைட்டியின் பிரதமர் எரியல் ஹென்ரி அங்கு ஒரு மாதத்திற்கு அவசர நிலையை அறிவித்துள்ளார்.

லெஸ் காயெஸ் நக­ரில் பல கட்­ட­டங்­கள் இடிந்து விழுந்­த­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர்.

உயிர் பிழைத்­த­வர்­க­ளைத் தேடும் பணி­யில் ஈடு­பட்­ட­தாக அவர்­கள் தெரிவித்­த­னர்.

மாண்ட சில­ரின் உடல்­கள் இடி­பா­டு­க­ளி­லி­ருந்து மீட்­டெ­டுக்­கப்­பட்டதாக குடி­யி­ருப்­பா­ளர்­கள் கூறி­னர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஹைட்டிக்கு உடனடியாக உதவுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது நாட்டிற்கு உத்தரவிட்டார்.

சுமார் ஒரு மாதத்­திற்கு முன்­பு­தான் ஹைட்­டி­யின் அதி­பர் ஜெவெ­னெல் மொய்ச கொல்­லப்­பட்­டார்.

மேலும் அந்நாட்டின் பல பகுதிகளில் கொவிட்-19 சூழலால் பலர் பசியால் வாடுகின்றனர். போதுமான மருத்துவ வசதிகளும் அங்கு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.