கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு

கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு

1 mins read
fcf3bff7-b5ea-46fa-9c8e-e4aa677d44d1
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் கொவிட்-19 தடுப்­பூ­சி­போட்­டுக்­கொண்­டோ­ருக்­குக் கட்­டுப்­பா­டு­கள் மேலும் தளர்த்­தப்­ப­ட­வுள்­ளன.

பொரு­ளி­ய­லின் சில துறை­களை மீட்க கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­ப­டு­வ­தாக அந்­நாட்­டின் பிர­த­மர் முகை­தின் யாசின் கூறி­னார். அதன்­படி சில மாநி­லங்­களில் சிகை அலங்­கா­ரக் கடை­கள், மின்­சா­ரப் பொருட்­கள், விளை­யாட்­டுப் பொருட்­கள், வாக­னக் கரு­வி­கள், அறை­க­லன்­கள் ஆகி­ய­வற்றை விற்­கும் கடை­கள் இயங்­க­லாம்.

வேறு சில இடங்­களில் துணி­மணி, விளை­யாட்­டுப் பொருட்­கள், பழை­மை­வாய்ந்த பொருட்­கள் ஆகி­ய­வற்றை விற்­கும் கடை­களும் இயங்­க­லாம்.

மோச­மா­கப் பர­வி­வ­ரும் கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லை­யும் கட்­டுப்­ப­டுத்தி பொரு­ளி­ய­லை­யும் மிட்­கும் முயற்­சி­யில் மலே­சியா ஈடு­பட்­டுள்­ளது. இதற்கிடையே அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி முதல் பள்ளிகள் கட்டங்கட்டமாகத் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.