'கூடுதல் சோதனைகள் தேவை'

'கூடுதல் சோதனைகள் தேவை'

1 mins read
d04e1b65-18be-4b05-af21-fe99bd846cc8
-

மணிலா: பிலிப்­பீன்­சின் கொவிட்-19 சோத­னை­கள், தொடர்­புத் தட­மறி­தல் நட­வ­டிக்­கை­கள் ஆகி­ய­வற்றை மேம்­ப­டுத்­த­வேண்­டும் என்று அந்­நாட்­டின் துணை அதிபர் லெனி ரொப்­ரெடோ கூறி­யுள்­ளார்.

அந்­நாட்­டில் அதி­க­மா­னோ­ரிடையே கிருமி பர­வி­வ­ரு­வ­தை­யொட்டி அவர் அவ்­வாறு சொன்னார்.

"நாங்­கள் எப்­போ­தும் சோதனை­களை அதி­க­ரிக்­கும் முயற்­சி­களை எடுத்­து­வ­ரு­கி­றோம், இல்­லா­வி­டில் புதி­தா­கக் கிரு­மித்­தொற்று ஏற்­படு­வோ­ரின் எண்­ணிக்கை தொடர்ந்து உய­ரும். சோதனை நடத்­தப்­படாததால் கிரு­மித்­தொற்று ஏற்பட்ட பல­ரைப் பற்­றித் தக­வல் தெரி­யாமல் இருக்­க­லாம்," எனத் தொலைக்­காட்சிப் பேட்டி ஒன்­றில் அவர் தெரிவித்­தார். சில வேளை­களில் சோத­னை­கள் நடத்­தப்­பட்­டி­ருக்­கும். ஆனால் தொடர்­புத் தட­ம­றி­தல் முயற்­சி­கள் போது­மான அள­வில் மேற்கொள்ளப்­பட்­டி­ருக்­காது என்று அவர் குறிப்பிட்­டார்.

பிலிப்பீன்சில் நேற்று 14,749 பேருக்குப் புதிதாக கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டது. இந்த எண்ணிக்கை, கடந்த ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதிக்குப் பிறகு ஒரு நாளைக்குப் பதிவானதில் ஆக அதிகமானது.

கூடு­த­லா­னோர் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­வ­தைத் தொடர்ந்து சோத­னை­கள் இன்­னும் மலி­வாக இருக்­க­வேண்­டும் எனத் திரு­மதி ரொப்­ரெடோ வலி­யு­றுத்­தி­னார்.

பிரச்­சி­னை­யைக் கையாள தொடர்பு தட­ம­றி­தல் நட­வ­டிக்­கை­களை மேம்­ப­டுத்­த­வேண்­டும் என்றும் அவர் சுட்­டி­னார்.