தென்கொரியாவில் ஆர்ப்பாட்டங்கள்

தென்கொரியாவில் ஆர்ப்பாட்டங்கள்

1 mins read
bc4305bf-83d0-4222-b9dc-fdda15485aad
-

சோல்: தென்­கொ­ரி­யாத் தலை­ந­கர் சோலில் அர­சாங்­கத்­திற்கு எதிரான ஆர்ப்­பாட்­டங்­க­ளைக் கையாள காவல்­து­றை­யி­னர் நூற்­றுக்­க­ணக்­கான பேருந்­து­க­ளைத் தடுப்­பு­க­ளா­கப் பயன்­ப­டுத்­தி­யுள்­ள­னர். பல இடங்­களில் சோத­னைச் சாவ­டி­க­ளை­யும் எழுப்­பி­னர்.

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த ஆண்­டு­தோ­றும் நடத்­தப்­படும் ஆர்ப்­பாட்­டங்­களை முறி­ய­டிக்க இந்த நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­ப­டு­கின்­றன.

கிரு­மிப் பர­வலை நன்கு கையாண்ட நாடு­களில் ஒன்­றா­கத் தென்­கொ­ரியா திகழ்­கிறது.

இருந்­தா­லும் அண்­மைக் கால­மாக அங்கு நான்­கா­வது அலை வீசு­கிறது.

சில நாட்­க­ளுக்கு முன் அங்கு முதன்­மு­றை­யாக ஒரு நாளைக்கு 2,200 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது.

இதே­போல் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்­தப்­பட்ட ஆர்ப்­பாட்­டங்­க­ளா­லும் தேவா­ல­யத்­தில் பலர் ஒன்­று­கூ­டி­ய­தா­லும் 1,800 பேருக்கு மேல் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது.

அதைக் கருத்­தில்­கொண்ட தென்­கொ­ரிய அரசாங்கம் விதி­மு­றை­களை மீறி ஆர்ப்­பாட்­டங்­களை நடத்­து­வோரைத் தண்­டிக்­கப்­போ­வ­தாக உறு­தி­ய­ளித்­தி­ருந்­தது.

இருந்­தா­லும் எச்­ச­ரிக்­கை­களை மீறி ஆர்ப்­பாட்­டங்­களை நடத்­து­மாறு சிலர் தொடர்ந்து ஊக்­கு­வித்­ததை அந்­நாட்­டின் உள்­ளூர் ஒளி­வ­ழி­களில் வெளி­யான காணொ­ளி­கள் தெரி­வித்­தன. ஆனால் ஆர்ப்­பாட்­டங்­களில் கலந்து­கொண்­டோ­ரி­டையே போதுமான தூர இடை­வெளி இருந்­தது.

சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆர்ப்­பாட்­டம் நடத்­திய ஓர் அமைப்­பைக் காவல்­து­றை­யி­னர் நேற்று முன்­தி­னம் கலைத்­த­னர். மேலும், கடந்த மே மாதத்­திலிருந்து சட்­ட­வி­ரோ­த­மா­கப் பல ஆர்ப்­பாட்­டங்­க­ளுக்கு ஏற்­பாடு செய்த ஓர் ஊழி­ய­ர­ணித் தலை­வ­ருக்­குக் கைதாணை பிறப்­பிக்­கப்­பட்­டது.