உள்ளூரில் புதிதாக 48 பேருக்கு கிருமித்தொற்று

உள்ளூரில் புதிதாக 48 பேருக்கு கிருமித்தொற்று

1 mins read
67502377-7159-4855-ba74-03d11ddc623f
சின் சுவீ சாலையில் உள்ள ஃமை ஃபர்ஸ்ட் ஸ்கூல் பாலர் பள்ளியில் நேற்றைய (ஆகஸ்ட் 15) நிலவரப்படி கொவிட்-19 தொற்றுக் குழுமம் 31 பேராக உயர்ந்துள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

உள்ளூரில் இன்று (ஆகஸ்ட் 16) நண்பகல் நிலவரப்படி புதிதாக 48 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 32 பேர், முன்னதாக கிருமி தொற்றியவர்களுடன் தொடர்புடையவர்கள். அவர்கள் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டனர்.

முன்னதாக கிருமி தொற்றியவர்களுடன் தொடர்புடைய மற்ற ஏழு பேருக்கு கண்காணிப்புப் பரிசோதனை மூலம் தொற்று உறுதியானதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எஞ்சிய ஒன்பது பேருக்கு எப்படி கிருமி தொற்றியது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

இந்நிலையில், வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த ஐந்து பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் இருக்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் வந்திறங்கியபோது அந்த ஐவருக்கும் தொற்று கண்டறியப்பட்டது.

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 66,225ஆக உள்ளது.

இதற்கிடையே, சின் சுவீ சாலையில் உள்ள ஃமை ஃபர்ஸ்ட் ஸ்கூல் பாலர் பள்ளியில் நேற்றைய (ஆகஸ்ட் 15) நிலவரப்படி கொவிட்-19 தொற்றுக் குழுமம் 31 பேராக உயர்ந்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை அத்தொற்றுக் குழுமம் முதன்முறையாக அடையாளம் காணப்பட்டது.