'வீரர்களின் உயிர்த்தியாகம் அர்த்தமில்லாமல் போய்விட்டது'

'வீரர்களின் உயிர்த்தியாகம் அர்த்தமில்லாமல் போய்விட்டது'

2 mins read
9eaa565d-1efa-44dd-aab2-ba0ddbca1375
காபூலுக்குள் தலிபான் போராளிகள் நுழைந்துவிட்டதாக செய்திகள் வெளியானதும் ஆப்கானிஸ்தானில் மாண்ட அமெரிக்க வீரர்களின் அன்புக்குரியவர்கள் அவர்களது கல்லறைகளுக்கு முன் சென்று கண்ணீர் விட்டனர். (மேல்படம்) ஆப்கான் அதிபர் மாளிகையைத் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்த தலிபான் போராளிகள். படங்கள்: ராய்ட்டர்ஸ், அல் ஜசீரா -
multi-img1 of 2

காபூல்: ஆப்­கா­னிஸ்­தான் தலை

நகர் காபூ­லை­யும் அங்­குள்ள

அதி­பர் மாளி­கை­யை­யும் தலி­பான் நேற்று கைப்­பற்­றி­யது.

அமெ­ரிக்­கப் படை­யி­னர் வெளி­யே­றிய சில நாட்­க­ளி­லேயே மின்­னல் வேகத்­தில் தலை­ந­கர் காபூலை தலி­பான் கைப்­பற்­றி­யி­ருப்­பது அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைட­னின் மூத்த ஆலோ­ச­கர்­களை அதிர்ச்­சி­யில் ஆழ்த்­தி­யுள்­ளது. இந்­நி­லை­யில், அதி­பர் பைடன் எடுத்த தவ­றான முடி­வால் தலி­பான் மீண்­டும்

ஆட்­சிக்கு வந்­துள்­ள­தாக அமெ­ரிக்­கா­வின் முன்­னாள் அதி­பர் டோனல்ட் டிரம்ப் சாடி­யுள்­ளார்.

"இது பைட­னுக்­குப் பெரிய அவ­மா­னம். ஆப்­கா­னிஸ்­தா­னில் இந்­தக் கொடுமை நிகழ அனு­ம­தித்­த­தற்கு அவர் பதவி விலக வேண்­டும்," என்­றார் திரு டிரம்ப்.

20 ஆண்­டு­க­ளுக்கு முன்பு ஆப்­கா­னிஸ்­தா­னில் அமெ­ரிக்­கப் படை நடத்­திய தாக்­கு­தலை அடுத்து, தலி­பா­னின் ஆட்சி கவிழ்ந்­தது.

இதை­ய­டுத்து, ஆப்­கா­னிஸ்­தானை தலி­பான் மீண்­டும் கைப்­பற்­றி­யி­ருப்­ப­தால் இவ்­வ­ளவு காலம் அங்கு போர் புரிந்து மாண்ட அமெ­ரிக்க ராணுவ வீரர்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ள­தாக அமெ­ரிக்­கர்­கள் பலர் அதி­ருப்தி தெரி­வித்­துள்­ள­னர். அவர்­க­ளது உயிர்த்

தியா­கத்­துக்கு அர்த்­தம் இல்­லா­மல் போய்­விட்­ட­தாக மாண்ட அமெ­ரிக்­கப் படை­யி­ன­ரின் குடும்­பத்­தி­னர் குமு­று­கின்­ற­னர்.

அமெ­ரிக்க வீரர்­கள் எதற்­கா­கப் பாடு­பட்­டார்­களோ அதை மிக எளி­தில் அமெ­ரிக்க அர­சாங்­கம் தாரை­வார்த்­து­விட்­ட­தாக அதி­ருப்­திக் குரல்­கள் எழுந்­துள்­ளன.

தலை­ந­கர் காபூ­லு­டன் நாட்­டின் பல பகு­தி­க­ளைத் தனது கட்­டுக்­குள் தலி­பான் கொண்­டு­வந்­து­விட்­ட­தால் இனி 20 ஆண்­டுக்கு முன்பு அந்த அமைப்பு நடத்­திய ஆட்­சி­முறை மீண்­டும் நடப்­புக்கு வரும் என்று ஆப்­கான் மக்­கள் கவலை தெரி­வித்­த­னர். தங்­க­ளுக்கு இனி சுதந்­தி­ரம் இல்லை என்று அவர்­களில் பலர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தங்­கள் மனக்­கு­றையை இறக்­கி­வைத்­த­னர். மிகக் கடு­மை­யான இஸ்­லா­மிய சட்­டங்­களை தலி­பான் நடை­மு­றைப்­ப­டுத்­தும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இந்­நி­லை­யில், முன்பு போல் இல்­லா­மல் பெண்

களுக்கு எதி­ராக அடக்­கு­மு­றை­யைக் கட்­ட­விழ்க்க வேண்­டாம் என்று ஐநா தலை­வர் அண்­டோ­னியோ குட்­டே­ரேஸ் தலி­பா­னி­டம் வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார். பொது­மக்­கள் பாது­காக்­கப்­பட வேண்­டும் என அவர் வலி­யு­றுத்தி னார். சண்­டை­யால் பாதிக்­கப்­பட்ட இடங்­களில் மிக மோச­மான துன்­பு­றுத்­தல்­களில் தலி­பான் ஈடு­ப­டு­வது குறித்து தொடர்ந்து பல தக­வல்­கள் கிடைப்­ப­தாக ஐநா தெரி­வித்­தது.

"துன்­பு­றுத்­தல்­கள் நிறுத்­தப்­பட வேண்­டும். ஆப்­கான் மக்­க­ளின் உரி­மை­களும் சுதந்­தி­ர­மும் மதிக்­கப்­பட வேண்­டும் என்று ஐநா தலை­வர் தலி­பா­னி­ட­மும் மற்ற அமைப்­பி­னர்­க­ளி­ட­மும் அழைப்பு விடுத்­துள்­ளார்," என்று ஐநா செய்­தித்­தொ­டர்­பா­ளர் ஸ்டீ­வன் டுகா­ரிச் கூறி­னார். ஆப்­கான் மக்­க­ளின் மனித உரி­மை­கள் நிலை­நாட்­டப்­பட வேண்­டும் என்று தலி­பான் போரா­ளி­க­ளி­டம் நியூ­சி­லாந்­துப் பிர­த­மர் ஜெசிண்டா ஆர்­டன் குரல் கொடுத்­துள்­ளார். கல்வி கற்­க­வும் வேலை செய்­ய­வும் ஆப்­கான் பெண்­க­ளுக்கு அனு­மதி அளிக்­கப்­பட வேண்­டும் என்று அவர் கூறி­னார்.