மலேசியா: பொதுச் சேவையில் இடையூறு இருக்காது

மலேசியா: பொதுச் சேவையில் இடையூறு இருக்காது

1 mins read
3b70c8c8-b767-4825-844f-ceff1d2f071d
-

புத்­ரா­ஜெயா: பிர­த­மர் பத­வி­யி­லி­ருந்து திரு முகை­தீன் யாசின் விலகியுள்ளபோதிலும் மலே­சி­யா­வின் அன்­றா­டப் பொதுச் சேவைப் பணி­கள் தங்­கு­த­டை­யின்றி நடை­பெ­றும் என்று மலே­சிய அர­சாங்­கத்­தின் தலை­மைச் செய­லா­ளர் முகம்­மது சுகி அலி உறுதி அளித்­துள்­ளார்.

அர­சாங்க அமைப்­பு­க­ளுக்­கி­டை­யி­லான ஒத்­து­ழைப்பு வலு­வாக இருப்­ப­தாக அவர் கூறி­னார்.

எனவே, நடப்­பில் உள்ள திட்­டங்­கள் சுமு­க­மான முறை­யில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் என்­றார் அவர்.

"தடை­யில்­லாச் சேவையை வழங்­கு­வ­தில் பொதுச் சேவை கடப்­பாடு கொண்­டுள்­ளது என நான் உறுதி அளிக்­கி­றேன். எவ்­வித பாதிப்­பும் இருக்­காது," என்று திரு சுகி அலி தெரி­வித்­தார்.

"அன்­றா­டப் பணி­களை அந்­தந்த அமைச்­சு­க­ளின் தலை­மைச் செய­லா­ளர்­கள் வழி­ந­டத்­து­வர்.

"நாட்­டில் அமை­தியை நிலை­நாட்­ட­வும் பொது ஒழுங்கை உறுதி செய்­ய­வும் போலி­சார், ஆயு­தப் படை அதி­கா­ரி­கள் உட்­பட அனைத்­துப் பாது­காப்பு படை­யி­ன­ரும் தயார்

­நி­லை­யில் உள்­ள­னர்," என்று திரு சுகி அலி அறி­வித்­தார்.

இந்­நி­லை­யில், பிர­த­மர் பத­வி­யி­லி­ருந்து திரு முகை­தீன் யாசின் நேற்று வில­கி­யதை அடுத்து, கடந்த ஓராண்டு இல்­லாத அள­வில் மலே­சிய ரிங்­கிட்­டின் மதிப்பு வீழ்ச்சி கண்­டுள்ளது.

மலே­சி­யா­வின் அர­சி­யல் சூழல் கார­ண­மாக அந்­நாட்­டில் முத­லீடு செய்ய முத­லீட்­டா­ளர்­கள் தயக்­கம் காட்­டு­வர் என்­றும் அதன் கார­ண­மாகப் பங்­கு­க­ளின் விலை குறை­யும் என்­றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஒரு அமெரிக்க டாலருக்கு 4.2410 ரிங்கிட் என நேற்று பதிவானது. மலேசிய பங்குச் சந்தை குறியீடும் 0.6% குறைந்தது.