ஜகார்த்தா: கொவிட்-19 நெருக்கடிநிலையால் பாதிக்கப்பட்டோருக்குக் கூடுதல் உதவி வழங்கப்படும் என்று இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ உறுதி அளித்துள்ளார்.
அடுத்த ஆண்டுக்கான
வரவுசெலவுத் திட்டத்தை அவர் நேற்று நாடாளுமன்றத்தில்
தாக்கல் செய்தார்.
கொவிட்-19 நெருக்கடிநிலையிலிருந்து இந்தோனீசியப் பொருளியலும் சமுதாயமும் மீண்டுவர தொடர்ந்து நிதி ஒதுக்கப்படும் என்றார் அவர்.
கொவிட்-19 பாதிப்பு முடிவுக்கு வராவிட்டால் நிலையற்ற தன்மை தொடரும் என்று திரு ஜோக்கோ எச்சரிக்கை விடுத்தார்.
வசதி குறைந்தோருக்கும்
எளிதில் பாதிப்படையக்கூடியவர்
களுக்கும் கூடுதல் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் நடைமுறைப்
படுத்தப்படும் என்று அவர் தெரி வித்தார். வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 9.4 விழுக்காட்டுத் தொகை கிருமித் தொற்றை எதிர்கொள்ள பயன் படுத்தப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

