ஜகார்த்தா: இந்தோனீசியாவின் ஜாவா தீவில் உள்ள மெராப்பி எரிமலை நேற்று வெடித்தது.
எரிமலையைச் சுற்றியுள்ள வட்டாரங்களில் சாம்பல் படர்ந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெடிப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள உயிர், பொருள் சேதம் பற்றி தகவல்கள் வெளியாகவில்லை.
எரிமலைக்கு அருகில் செல்ல வேண்டாம் என்று அருகில் உள்ள கிராமவாசிகளிடம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எரிமலைக் குழம்பு வழிந்தோடும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

