தென்கொரிய மருத்துவத் துறைக்கு நெருக்குதல்

தென்கொரிய மருத்துவத் துறைக்கு நெருக்குதல்

1 mins read
1b15efc3-9cfb-486c-8c43-b56fad2fe97c
-

சோல்: தென்­கொ­ரி­யா­வில் கொவிட்-19 நான்­கா­வது அலை ஏற்­பட்­டி­ருப்­ப­தால் அந்­நாட்­டின் மருத்­து­வத் துறை முடங்­கும் அபா­யம் இருப்­ப­தாக அஞ்­சப்­ப­டு­கிறது.

மருத்­து­வ­ம­னை­களில் படுக்­கைப் பற்­றாக்­குறை நில­வு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்­சைக்­கா­கக் காத்­துக்­கொண்­டி­ருந்த பெண் மாண்­ட­தாக செய்­தி­கள் வெளி­யாகி உள்­ளன.

நேற்று முன்­தி­னம் தென்­கொ­ரி­யா­வில் புதி­தாக 1,556 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது. தென்­கொ­ரி­யா­வில் பாதிக்­கப்­பட்­டோ­ரின் மொத்த எண்­ணிக்கை 225,481ஆக அதி­க­ரித்­துள்­ளது.

புதி­தா­கப் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் 1,493 பேருக்­குச் சமூக அள­வில் பாதிப்பு ஏற்­பட்­டதாக தென்கொரிய அரசு கூறியது.