தோக்கியோ: கொவிட்-19 நெருக்கடிநிலை மோசமடைந்
திருப்பதால் அடுத்த மாதம் நடுப்
பகுதி வரை அவசரநிலையை ஜப்பானிய அரசாங்கம் நீட்டிக்க இருக்கிறது. இதில் தலைநகர் தோக்கியோவும் அடங்கும்.
தற்போது நடப்பில் உள்ள அவசரநிலை இம்மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஆனால் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் அவசர
நிலையை நீட்டிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 24ஆம் தேதியன்று உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டி தோக்கியோவில் தொடங்க இருக்கிறது. இதுகுறித்து ஜப்பானிய மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
போட்டியை நேரில் காணும் ரசிகர்களின் எண்ணிக்கையைக் குறைக்க போட்டியின் ஏற்பாட்
டாளர்கள் கடந்த வாரம்
இணக்கம் தெரிவித்தனர்.

