சிட்னியில் அதிகரித்துள்ள கொவிட்-19 மரணங்கள்

சிட்னியில் அதிகரித்துள்ள கொவிட்-19 மரணங்கள்

1 mins read
25e448ec-867e-4d45-a772-45ae2f92660f
-

சிட்னி: ஆஸ்­தி­ரே­லி­யா­வின் சிட்னி நக­ரில் முன்­னெப்­போ­தும் இல்­லாத அள­வுக்கு ஆக அதி­க­மான கொவிட்-19 மர­ணங்­கள் நேற்று பதி­வா­கின.

மெல்­பர்­னில் கொவிட்-19

கிரு­மித்­தொற்­றால் பாதிப்­ப­டைந்­தோ­ரின் எண்­ணிக்கை அதி­

க­ரித்­தி­ருப்­ப­தால் இர­வு­நேர ஊர­டங்­கும் மேலும் இரண்டு வாரங்­

க­ளுக்கு முடக்­க­நி­லை­யும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.

சிட்­னி­யில் கடந்த எட்டு வாரங்­க­ளாக முடக்­க­நிலை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஆஸ்­தி­ரே­லி­யா­வில் ஏற்­பட்­டுள்ள மூன்­றா­வது கொவிட்-19 அலை­யில் அந்நகரம்தான் அதி­கம் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னால் ஆஸ்­தி­ரே­லி­யா­வில் மீண்­டும் பொரு­ளி­யல் மந்­த­நிலை ஏற்­படும் ஆபத்து ஏற்­பட்­டுள்­ள­தாக அஞ்­சப்­ப­டு­கிறது.

சிட்­னி­யில் நேற்று கொவிட்-19 கிரு­மித்­தொற்று கார­ண­மாக ஏழு பேர் மாண்­ட­தாக நியூ சவுத் வேல்ஸ் மாநி­லத்­தின் முதல்­வர் கிளே­டிஸ் பெரே­ஜிக்­லி­யன் தெரி­வித்­தார்.

நியூ சவுத் வேல்ஸ் மாநி­லத்­தில் மேலும் 478 பேருக்­குக்

கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ள­தாக அவர் கூறி­னார்.

கிரு­மித்­தொற்று தலை­தூக்­கி­ய­தி­லி­ருந்து இதுவே நியூ சவுத் வேல்ஸ் மாநி­லத்­தில் பதி­வா­கி­யுள்ள ஆக அதி­கமான அன்­றா­டப் பதிவு.