நியூசிலாந்தில் முதல் தொற்றுச் சம்பவம்; கட்டுப்பாடுகள் கடுமையாகின்றன

நியூசிலாந்தில் முதல் தொற்றுச் சம்பவம்; கட்டுப்பாடுகள் கடுமையாகின்றன

1 mins read
ae35e4fc-6402-48cc-bcc8-b422337ca96d
-

வெலிங்டன்: நியூசிலாந்தில் ஆறு மாதங்களுக்குப் பிறகு முதல் தொற்றுச் சம்பவம் பதிவாகியுள்ளது. ஆகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் ஒருவருக்கு தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது. அவர் எப்படி பாதிக்கப்பட்டார் என்பது தெரியவில்லை. அவருடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தச் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் சுகாதார அமைச்சு தெரிவித்தது. பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவோரும் பொது இடங்களில் தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்க முடியாதவர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணியும்படி அமைச்சு வலியுறுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் கடைசியாக நியூசிலாந்தில் தொற்றுச் சம்பவம் பதிவானது. முன்கூட்டியே தீவிர நடவடிக்கைகள் எடுக்கப் பட்டதால் தொற்று முழுமையாக ஒழிக்கப்பட்டது. எல்லைகள் மூடப்பட்டிருந்தாலும் நியூசிலாந்து மக்கள் கட்டுப்பாடின்றி சுதந்திரமாக வசித்துவந்தனர்.

ஆனால் தற்போது பதிவான ஒரே தொற்றுச் சம்பவத்தால் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், மூன்று நாள்கள் கடுமையான கட்டுப்பாடு களால் நாடு முடக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.