வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானி லிருந்து தனது ராணுவத்தை மீட்டுக் கொள்வதில் உறுதியாக இருப்பதாக அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
"இன்னும் எத்தனை ராணுவ வீரர்களின் உயிர்களை இழப்பது," என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
குழப்பமான சூழ்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதால் கடுமையான விமர்சனங்கள் எழுந்து உள்ளன.
அங்கு போரிட்டு உயிரிழந்த வீரர்களின் தியாகம் வீணாகி விட்டதாக விமர்சிக்கப்படுகிறது.
சீனாவும் அமெரிக்க ராணு வத்தின் செயலைச் சாடியிருக்கிறது.
அமெரிக்க ராணுவம் அவசர மாக வெளியேறுவதால் ஆப்கானிஸ்தானில் நிலைமை மேலும் மோசமாகும் என்று சீன வெளி யுறவு அமைச்சர் வாங் யி கூறியுள்ளார். இருந்தாலும் இந்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் சேர்ந்து செயல்படத் தயாராக இருப்பதாக அவர் சொன்னார்.
இந்நிலையில் அமெரிக்க வீரர்கள் வெளியேறுவதை அதிபர் பைடன் நியாயப்படுத்தியிருக்கிறார்.
இனி ஒருபோதும் இதற்கு நல்ல தருணம் ஏற்படப் போவதில்லை என்றார் அவர்.
சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று ஆப்கானிஸ்தானை தலிபான் முழுமையாகக் கைப்பற்றியது.
தலைநகர் காபூல் கடைசியாக தலிபான் வசமானது. ஆப்கன் அதிபர் அஷ்ரஃப் கனி தப்பியோடி விட்டார். இதனால் இருபது ஆண்டு கால போர் முடிவுக்கு வந்துள்ளது.
அதிபர் அஷ்ரஃப் கனி, கடந்த ஏழு ஆண்டுகளில் நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தத் தவறிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே ஆப்கானிஸ்தானி லிருந்து தப்பிச்செல்வதற்காக காபூல் அைனத்துலக விமான நிலையத்தை நூற்றுக்கணக்கான வர்கள் முற்றுகையிட்டதால் பதற்றம் அதிகரித்தது.
அமெரிக்க ராணுவ விமானம் ஒன்று புறப்பட்டபோது துரத்திச் சென்ற பலர் விமானத்தில் ஏற முயற்சி செய்தனர். விமானம் பறக்கத் தொடங்கியதும் சிலர் கீழே விழுந்ததால் உயிரிழந்தனர்.
விமான நிலைய ஓடுதளத்திலிருந்து பொதுமக்கள் அகற்றப்பட்டு தூதர்களையும் குடிமக்களையும் வெளியேற்றும் பணி நேற்று காலை மீண்டும் தொடங்கியது.
அமெரிக்கர்களையும் அவர்களுக்கு பணியாற்றிய ஆப்கன் நாட்டவர்களையும் வெளியேற்றுவதில் 2,500க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்கள் உதவி வருவதாக மேஜர் ஜெனரல் ஹாங்க் டைலரை மேற்கோள்காட்டி ஊடகங்கள் தெரிவித்தன.
அமெரிக்க போலிசார் துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தை கலைக்க வேண்டியிருந்தது.
விமான நிலையத்தை அமெரிக்க ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது.
அங்கு வர வேண்டாம் என்று தலிபானுக்கு அமெரிக்க ராணுவம் முன்னதாக எச்சரித்திருந்தது.

