தைவான் வீழாது என்று பிரதமர் கூறியதால் சீனா ஆத்திரம்

தைவான் வீழாது என்று பிரதமர் கூறியதால் சீனா ஆத்திரம்

2 mins read
5e04b0e3-06a4-4665-8cc9-ba90ca6bed9c
-

தைப்பே: தைவான் தாக்­கப்­பட்­டால் ஆப்­கா­னிஸ்­தான் மாதிரி வீழ்ந்­து­வி­டாது என்று தைவான் பிர­த­மர் சூ ட்செங்-சாங் கூறியுள்­ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சீனா அந்நாட்டுக்கு அருகே ராணுவப் பயிற்சியை நடத்தப் போவதாக அச்சுறுத்தியுள்ளது.

அண்டை நாடான சக்தி வாய்ந்த சீனாவை மறைமுகமாக எச்சரிக்கும் வகையில் தைவான் பிரதமர் பேசி உள்ளார்.

ஆப்­கா­னிஸ்­தா­னில் அமெ­ரிக்­கப் படை­கள் மீட்­டுக் கொள்­ளப் ­பட்­ட­தால் அந்­நாட்­டின் அர­சாங்­கம் வீழ்ந்­தது. இதே­போல நிலைமை தைவா­னுக்­கும் ஏற்­பட்டு சீனா படை­யெ­டுத்­தால் தைவா­னைப் பாது­காக்க அமெ­ரிக்கா வருமா என்று விவா­தம் தைவா­னில் கிளம்­பி­யுள்­ளது. எதிரி நாட்­டில் நுழைந்­தால் ஆப்­கா­னிஸ்­தா­னைப்­போல தைவா­னி­லும் அதி­பர் அல்­லது பிர­த­மர் தப்­பி­யோடி விடு­வார்­களா என்று கேட்­ட­தற்கு, 1949 முதல் 1987 வரை­யில் ராணுவ சர்­வா­தி­கார ஆட்சியில் தைவான் மக்­கள் உயிருக்கு அஞ்ச வில்லை என்று திரு சூ கூறினார்.

அதுபோல, தற்போது தைவானை விழுங்க விரும்பும் சக்திவாய்ந்த நாடுகளால் மக்கள் அஞ்ச மாட் டார்கள் என்றார் அவர்.

"நாங்­கள் நாட்­டை­யும் நிலத்­தை­யும் பாது­காக்க வேண்­டும். எதி­ரி­ க­ளின் பெருமையைப் பேசும் சில­ரைப் போல இருக்­கக் கூடாது," என்று திரு சூ மேலும் தெரி­வித்­தார்.

இதற்கிடையே தைவான் தனது நாட்டின் ஒரு பகுதி என்று அடிக்கடி நினைவுபடுத்தும் சீனா, தை வானுக்கு அருகே தாக்குதல் பயிற்சி மேற்கொள்ள போர் விமானம், நீர் மூழ்கிக்கப்பல், போர்க்கப்பல் ஆகியவற்றை அனுப்பி யிருப்பதாகக் கூறியது. ஆனால் மேல் விவரங்களை சீன ராணுவம் வெளியிடவில்லை.