நியூசிலாந்தில் முதல் தொற்றுச் சம்பவம்; கட்டுப்பாடுகள் கடுமையாகின்றன

நியூசிலாந்தில் முதல் தொற்றுச் சம்பவம்; கட்டுப்பாடுகள் கடுமையாகின்றன

1 mins read
132841d4-daee-4e78-be08-aa601e0069da
-

வெலிங்­டன்: நியூ­சி­லாந்­தில் ஆறு மாதங்­க­ளுக்­குப் பிறகு முதல் தொற்­றுச் சம்­ப­வம் பதி­வா­கி­யுள்­ளது.

ஆகப்­பெ­ரிய நக­ர­மான ஆக்­லாந்­தில் ஒரு­வ­ருக்கு தொற்று இருப்­பது நேற்று உறுதி செய்­யப்­பட்­டது.

அவர் எப்­படி பாதிக்­கப்­பட்­டார் என்­பது தெரி­ய­வில்லை. அவ­ரு­டன் தொடர்­பில் இருந்­த­வர்­களை அடை­யா­ளம் காணும் பணி நடை­பெற்று வரு­கிறது. இந்­தச் சம்­ப­வம் குறித்து தீவி­ர­மாக விசா­ரித்து வரு­கி­றோம் என்று நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது. பொதுப் போக்­கு­வ­ரத்தை பயன்­ப­டுத்­து­வோ­ரும் பொது இடங்­களில் தனி­ந­பர் இடை­வெ­ளியை கடைப்­பி­டிக்க முடி­யா­த­வர்­களும் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக முகக்­க­வ­சம் அணி­யும்­படி அமைச்சு வலி­யு­றுத்­தி­யுள்­ளது. கடந்த பிப்­ர­வரி மாதம் கடை­சி­யாக நியூ­சி­லாந்­தில் ­தொற்­றுச் சம்­ப­வம் பதி­வா­னது. முன்­கூட்­டியே தீவிர நட­வ­டிக்­கை­கள் எடுக்கப் பட்டதால் தொற்று முழு­மை­யாக ஒழிக்­கப்­பட்­டது. எல்­லை­கள் மூடப்­பட்­டி­ருந்­தா­லும் நியூ­சி­லாந்து மக்­கள் கட்­டுப்­பா­டின்றி சுதந்­தி­ர­மாக வசித்­து­வந்­த­னர்.

ஆனால் தற்போது பதிவான ஒரே தொற்றுச் சம்பவத்தால் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன், மூன்று நாள்கள் கடுமையான கட்டுப்பாடு களால் நாடு முடக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.