பிலிப்பீன்சின் உத்தேச வரவு செலவுத் திட்டம்

பிலிப்பீன்சின் உத்தேச வரவு செலவுத் திட்டம்

1 mins read
44acdd5f-cc3e-4b8a-893b-dcc413862244
-

மணிலா: பிலிப்­பீன்ஸ் அதி­பர் டுட்­டர்டே, நாட்டை கொவிட்-19 பாதிப்­பி­லி­ருந்து மீட்­டெ­டுக்க 5,024 டிரில்­லி­யன் பிசோ (S$135 பில்­லி­யன்) மதிப்பில் 2022ஆம் ஆண்­டுக்­கான உத்­தேச வரவு செல­வுத் திட்­டத்தை தயா­ரித்­துள்­ளார் என்று அதி­பர் மாளிகை ேபச்­சா­ளர் ஒரு­வர் நேற்று தெரி­வித்­தார். கொள்ளை நோயால் சரிந்து கிடக்­கும் பொரு­ளி­யலை தூக்கி நிறுத்த பிலிப்­பீன்ஸ் அர­சாங்­கம் போராடி வரு­கிறது. புதிய உரு­மாறிய கிரு­மி அச்சுறுத்தி வருகிறது. வேலை இழப்­பு­கள் அதி­க­ரித்து வரு­கின்­றன.

இத­னால் சாதனை அள­வில் புதிய வர­வு செலவுத் திட்­டம் இருக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. உத்­தேச வரவு செல­வுத் திட்­டம், 2021ஆம் ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் 11.5 விழுக்­காடு அதி­கம். அடுத்த மாதம் நாடா­ளுமன்­றத்­தில் உத்­தேச திட்­டம் சமர்ப்­பிக்­கப்படும் என்று டுட்­டர்ே­ட­யின் பேச்­சா­ள­ரான ஹேரி ரோக் செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் தெரி­வித்­தார்.