பெண்கள் உரிமை, அமைதிக்கு உறுதி

பெண்கள் உரிமை, அமைதிக்கு உறுதி

2 mins read
faa58750-abb4-49ca-94ce-acd52b5a7f19
செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஸைபி­ஹுல்லா முஜா­ஹித். படம்: நியூயார்க் டைம்ஸ் -
multi-img1 of 3

முதல் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய தலிபான் படை

காபூல்: தலைநகர் காபூல் கடைசியாக கைப்பற்றப்பட்ட பிறகு, நடந்த முதல் அதிகாரபூர்வ செய்தி யாளர் கூட்டத்தில் அமைதிக்கும் பெண்கள் உரிமைகளுக்கும் தலி பான் படை உத்தரவாதம் அளித்து உள்ளது.

ஆனால் இஸ்லாமிய சட்டத்திற்கு உட்பட்டு அவை இருக்கும் என்று தலிபான் பேச்சாளர் ஸைபி­ஹுல்லா முஜா­ஹித் தெரிவித்தார்.

தலி­பா­னின் அறி­விப்பு சுருக்­க­மாக இருந்­தா­லும் இரு­பது ஆண்டு ­க­ளுக்கு முன்பு இருந்த கடு­மை­யான ஆட்சி முறை தற்­போது இருக்காது என்பதைக் காட்­டி­யது.

நேற்று முன்தினம் காபூல் அனைத்­து­லக விமான நிலை­யத்­தில் நூற்றுக்கணக்கானவர்கள் ஒரே சமயத்தில் விமா­னங்­களில் ஏறி தப்­பிச் செல்ல முயற்சி செய்­த­தால் குழப்­ப­மும் அம­ளி­யும் ஏற்­பட்­டது. ஓடும் விமா­னத்தை துரத்­திப் பிடித்து ஏறிய சிலர் விமா­னம் பறக்­கத் தொடங்­கி­ய­தும் கீழே விழுந்து மாண்­ட­னர். இந்­தச் சம்­ப­வத்­திற்கு பிறகு விமான நிலை­யம் கட்­டுக்­குள் கொண்டு வரப்­பட்டு அமெரிக்­ கா­வும் மேற்­கத்­திய நாடு­களும் தங்­க­ளு­டைய தூதர்­க­ளை­யும் வீரர்­க­ளை­யும் வெளி­யேற்றி வரு­கின்­றன.

இந்த நிலை­யில் தலி­பான் படை­யி­ன­ரின் மென்­மை­யான போக்கு வெளிப்­பட்­டுள்­ளது.

1996 முதல் 2001 வரை ஆட்சி செய்­த­போது இஸ்­லா­மிய சட்­டத்தை தீவி­ர­மாக அம­லாக்­கிய தலி­பான் படை­யி­னர், பெண்­கள் வேலைக்­குச் செல்­லத் தடை விதித்­த­னர். மீறு­வோ­ருக்கு பொது­மக்­கள் முன்­னி­லை­யில் கல்­லால் அடித்து தண்டனை விதிக்கப்பட்டது.

அப்போது பெண்­கள் பள்­ளிக்­குச் செல்­ல­வும் தடை விதிக்­கப்­பட்­டது. பெண்­கள் வெளியே செல்­லும்­போது முழு­மை­யாக மூடப்­பட்ட உடையை அணிந்­தி­ருக்க வேண்­டும்.

செய்தியாளர்களிடம் தொடர்ந்து பேசிய பேச்சாளர், "எங்­க­ளுக்கு உள்­நாட்­டி­லி­ருந்­தும் வெளி­நாட்­டி­லி­ருந்­தும் இனி விரோ­தி­கள் வேண்­டாம்." என்றார்.

"பெண்­கள் வேலைக்­கும் பள்­ளிக்­கும் செல்ல அனு­ம­திப்­போம். ஒரு துடிப்­பான சமூ­க­மாக இருக்­கும். ஆனால் இஸ்­லா­மிய கட்­ட­மைப்­புக்கு உட்­பட்­டி­ருக்­கும்," என்று ஸைபிஹுல்லா முஜாஹித் கூறினார்.

இதற்குப் பதிலளிக்கும் விதத் தில் நியூயார்க்கில் பேசிய ஐநா பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக், என்ன நடக்கிறது, உறுதிமொழி நிறை வேற்றப்படுகிறதா என்பதை பொறுத் திருந்து பார்க்க வேண்டும் என்றார்.

இவ்வேளையில் ஆப்கானிஸ்தான் ஆட்சியை தலிபான் கைப்பற்றியிருப் பதால் மனித உரிமை மீறல்கள் குறித்து அக்கறை எழுந்துள்ளது.

இது பற்றி ஆலோசனை நடத்த அடுத்த வாரம் ஐநா மனித உரிமைகள் மன்றத்தின் கூட்டம் நடைபெறுகிறது.

ஐரோப்பிய ஒன்றியம், பெண்கள் உட்பட அடிப்படை உரிமைகளை மதித்து நடந்தால் மட்டுமே தலி பானுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று கூறியுள்ளது.