மலேசியாவில் ஒரே நாளில் 22,242 பேர் பாதிப்பு; தடுப்பூசி போட்ட நால்வர் பலி

மலேசியாவில் ஒரே நாளில் 22,242 பேர் பாதிப்பு; தடுப்பூசி போட்ட நால்வர் பலி

2 mins read
fc3a6fb9-9907-45ab-bc0b-c2d099c91d43
-

புத்­ர­ாஜெயா: மலே­சி­யா­வில் நேற்று ஒரே நாளில் இது­வரை இல்­லாத புதிய உச்­ச­மாக 22,242 பேர் கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­னர்.

இத­னால் கொள்­ளை­நோ­யால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 1,466,512ஐ எட்­டி­யுள்­ளது என்று சுகா­தா­ரத் துறை தலை­வர் நூர் ஹிஷாம் அப்­துல்லா நேற்று தெரி­வித்­தார்.

சிலாங்­கூ­ரில் மட்­டும் புதி­தாக 6,858 பேர் பாதிக்­கப்­பட்­ட­னர் என்று டுவிட்­டர் பதி­வில் அவர் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

இதற்கு அடுத்­த­ப­டி­யாக சாபா­வில் 2,413 பேரும் பினாங்­கில் 1,867 பேரும் கெடா­வில் 1,852 பேரும் பாதிக்­கப்­பட்­ட­னர். கோலா­லம்­பூ­ரில் நேற்று ஒரே நாளில் 1,587 பேரும் ஜோகூ­ரில் 1,477 பேரும் தொற்­றுக்கு ஆளா­கி­னர்.

இதற்­கி­டையே மலே­சி­யா­வில் முழு­மை­யாக தடுப்­பூசி போட்­டுக் கொண்ட நான்கு பேர் கிரு­மித்­தொற்­றால் மாண்­ட­னர்.

ஒரு முறை தடுப்­பூசி போட்­டுக் கொண்­ட­வர்­களில் எண்­பது பேர் தொற்­றுக்­குப் பலி­யா­கி­னர் என்று டாக்­டர் நூர் ஹிஷாம் மேலும் தெரி வித்தார்.

"அண்­மைய மருந்­தி­யல் தர­வு­களை ஆராய்ந்­த­தில் பதி­வான 12,993 மர­ணங்­களில் எண்­பது பேர் ஒரு முறை மட்­டும் தடுப்­பூசி போட்­ட­வர்­கள், நான்கு பேர் இரண்டு முறை தடுப்­பூசி போட்­ட­வர்­கள்," என்று அவர் கூறினார்.

கிள்­ளான், ஜோகூர், பினாங்கு மற்­றும் சர­வாக் எல்­லை­க­ளுக்கு அப்­பால் கிரு­மித்­தொற்று அதி­க­ரித்து வரு­கிறது. இத­னால் தடுப்­பூ­சிக்­குப் பிந்­திய தர­வு­கள் ஆரா­யப் படு­கின்­றன. குறிப்­பாக 'டெல்டா' கிரு­மி­ தொடர்ந்து உரு­மாறி வரு­வ­தால் தடுப்­பூ­சி­க­ளின் ஆற்­றல் பற்றி கேள்வி­யெ­ழுந்­துள்­ளது.

மலே­சி­யா­வில் மாறு­பட்டு வரும் டெல்டா மற்­றும் இதர உரு­மா­றிய கிரு­மி­களை எதிர்த்­துப் போரா­டு­வ­தற்கு பூஸ்­டர் தடுப்­பூசி தேவையா என்­பதை முடிவு செய்ய இந்­தத் தர­வு­கள் மிக­வும் முக்­கி­யம் என்று நிபு­ணர்­கள் கூறி­யுள்­ள­னர். மலே சியாவில் திடீரென தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வரு கின்றன.