சிங்கப்பூர்: ஆப்கானிஸ்தான் நிலவரத்தை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக சிங்கப்பூர் கூறியுள்ளது.
"குடிமக்கள் மற்றும் அங்கிருந்து வெளியேறும் வெளிநாட்டவர்களின் பாதுகாப்பை அனைத்து தரப்பினரும் உறுதி செய்ய வேண்டும். தற்போதைய பதற்றமான சூழலில் சிங்கப்பூரர்கள் அங்கு செல்லவோ தங்கவோ கூடாது என்று வெளியுறவு அமைச்சு கேட்டுக்கொண்டது. உதவி தேவைப்படும் சிங்கப்பூரர்கள் வெளியுறவு அமைச்சுடன் தொடர்பு கொள்ளலாம்.

