ஹாங்காங்கில் நான்கு மாணவர்கள் கைது

1 mins read
ae8446fd-75ea-413a-be34-b9d3f048c3c4
-

ஹாங்­காங்: ஹாங்­காங் பல்­க­லைக்கழக மாண­வர் சங்­கத்­தின் நான்கு உறுப்­பி­னர்­களை தேசிய பாது­காப்பு அதி­கா­ரி­கள் கைது செய்­துள்­ள­னர்.

அவர்­கள் மீது பயங்­க­ர­வா­தக் குற்­றச்­சாட்டு சுமத்­தப்­படும் என்று அதி­கா­ரி­கள் கூறினர்.

இந்­தச் சம்­ப­வத்தை சுட்­டிக்­காட்­டிய பாது­காப்புத் தலை­வர், 'சட்­டத்தை மதிக்­கும் கலா­சா­ரத்தை' நிலை­நாட்ட வேண்­டி­ய அவசியம் ஏற்பட்டு உள்ளது என்­றார்.

பயங்­க­ர­வா­தத்தை ஆத­ரித்­த­தற்­காக 18 முதல் 20 வயது வரை­யி­லான மாண­வர்­கள் தேசிய பாது­காப்­புச் சட்­டத்­தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தாக போலிஸ் படைத் தலை­வ­ரான மூத்த சூப்­பி­ரி­டென்­டண்ட் ஸ்டீவ் லி கூறினார்.

காவல்­துறை அதி­காரி ஒரு­வரை கத்­தி­யால் குத்­தி­ய­வ­ருக்கு அஞ்­சலி செலுத்­தும் தீர்­மா­னத்தை மாண­வர்­கள் நிறைவேற்றியதால் அவர்கள் மீது கைது நடவடிக்கை பாய்ந்து உள்ளது.