அவதியில் ஆஸ்திரேலியா

அவதியில் ஆஸ்திரேலியா

1 mins read
1e79b029-a0e7-449c-9d37-1efd75c7a52b
ஆள் நடமாட்டமின்றி அமைதியாகக் காணப்படும் சிட்னியின் மத்திய வர்த்தகப் பகுதி. படம்: இபிஏ -

சிட்னி: ஆஸ்­தி­ரே­லி­யா­வில் ஒரு நாளைக்கு இது­வரை இல்­லாத அளவில் புதி­தாக கொவிட்-19 கிருமித்­தொற்று ஏற்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை பதி­வா­கி­யுள்­ளது.

நியூ சவுத் வேல்­ஸில் மட்­டும் புதி­தாக 681 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது.

அம்­மா­நி­லத்­தில் கிட்­டத்­தட்ட இரண்டு மாதங்­க­ளுக்கு வீட்­டில் இருக்­கும்­படி கட்­டாய உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்கு முன் கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட முடக்­க­நிலை நன்கு பல­னளித்­தது.

ஆனால் இப்­போது டெல்டா வகை கொவிட்-19 கிரு­மிப் பரவலைக் கட்­டுப்­ப­டுத்த அந்த அணுகு­முறை வேலை செய்­ய­வில்லை என்று அதி­கா­ரி­கள் எண்ணு­கின்­ற­னர்.

டெல்டா வகை கிரு­மி­யைச் சகித்­துக்­கொண்டு வாழ எல்­லோ­ரும் கற்­றுக்­கொள்­ள­வேண்­டும் என்று நியூ சவுத் வேல்­ஸின் முத­ல­மைச்­சர் கிலே­டிஸ் பெரெட்­ஜிக்­லி­யன் கூறி­னார்.

மற்ற மாநி­லங்­க­ளுக்கு முன்பு நியூ சவுத் வேல்ஸ் இதை உணர்ந்து வரு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

முடக்­க­நி­லை­யைக் கட்­டங்­கட்­ட­மா­கத் தளர்த்த கூடு­தலானோருக்குத் தடுப்­பூசி போடு­வது அவ­சி­யம் என்று அவர் கூறி­னார்.

நியூ சவுத் வேல்ஸின் தலைநகர் சிட்னியில் கிருமிப் பரவல் மோசமாக இருந்துவந்துள்ளது.

இப்­போது அங்­கி­ருந்து ஆஸ்தி­ரே­லி­யா­வின் இதர பகு­தி­க­ளுக்­கும் கொவிட்-19 பர­வி­வ­ரு­கிறது.

விக்­டோ­ரியா மாநி­லத்­தில் ஒரே நாளில் புதி­தாக கிருமி தொற்­றி­யோ­ரின் எண்­ணிக்கை இரண்டு மடங்­கிற்­கும் அதிகமானது.

நேற்றைய நிலவரப்படி அங்கு 57 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது.