தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நடவடிக்கை எடுக்க வலியுறுத்து

1 mins read
47aff710-5ba0-4df9-a702-ca758faeda58
-

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வில் சில்­லறை வர்த்­தக, பொழு­து­போக்­குத் துறை­களில் மக்­கள் நட­மாட்டம், கொவிட்-19 கிரு­மிப் பர­வல் சூழ­லுக்கு முந்­தைய காலத்­தில் இருந்­த­தைப் போல் உள்­ள­தாகப் புதிய தக­வல்­கள் தெரி­வித்­துள்­ளன.

அத­னைத் தொடர்ந்து கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த அந்­நாடு தகுந்த நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வேண்­டும் என்று உல­கச் சுகா­தார நிறு­வ­னம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது. நிலை­மை­யைக் கையாள தெளிவான திட்­டத்தை வரைந்து உட­ன­டி­யாக நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வேண்­டும் என்று நிறு­வ­னம் வெளி­யிட்ட ஓர் அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

பான்டன், மேற்கு ஜாவா, மத்திய ஜாவா ஆகிய பகுதிகளின் வர்த்தக, பொழுதுபோக்குத் துறைகளில் மக்கள் நடமாட்டம் கணிசமாக அதிகரித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. உணவகங்கள், கடைத்தொகுதிகள், நூலகங்கள் உள்ளிட்டவை இந்தத் துறைகளில் அடங்கும்.

கொவிட்-19 கிருமி ஆக வேகமா­கப் பர­வும் ஆசிய நாடாக இந்­தோ­னீ­சியா சென்ற மாதம் வகைப்­ப­டுத்­தப்­பட்­டது. எனி­னும், கடந்த சில நாட்­களில் அங்கு புதிதா­கக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை நன்கு குறைந்­துள்­ளது.

'கொவிட்-19 முந்தைய நிலையில் இந்தோனீசியா'