ஜகார்த்தா: இந்தோனீசியாவில் சில்லறை வர்த்தக, பொழுதுபோக்குத் துறைகளில் மக்கள் நடமாட்டம், கொவிட்-19 கிருமிப் பரவல் சூழலுக்கு முந்தைய காலத்தில் இருந்ததைப் போல் உள்ளதாகப் புதிய தகவல்கள் தெரிவித்துள்ளன.
அதனைத் தொடர்ந்து கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த அந்நாடு தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று உலகச் சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. நிலைமையைக் கையாள தெளிவான திட்டத்தை வரைந்து உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று நிறுவனம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பான்டன், மேற்கு ஜாவா, மத்திய ஜாவா ஆகிய பகுதிகளின் வர்த்தக, பொழுதுபோக்குத் துறைகளில் மக்கள் நடமாட்டம் கணிசமாக அதிகரித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. உணவகங்கள், கடைத்தொகுதிகள், நூலகங்கள் உள்ளிட்டவை இந்தத் துறைகளில் அடங்கும்.
கொவிட்-19 கிருமி ஆக வேகமாகப் பரவும் ஆசிய நாடாக இந்தோனீசியா சென்ற மாதம் வகைப்படுத்தப்பட்டது. எனினும், கடந்த சில நாட்களில் அங்கு புதிதாகக் கிருமித்தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை நன்கு குறைந்துள்ளது.
'கொவிட்-19 முந்தைய நிலையில் இந்தோனீசியா'