'ஃபைசர், மொடர்னா தடுப்பூசிகளின் ஆற்றல் குறைந்திருக்கலாம்'

'ஃபைசர், மொடர்னா தடுப்பூசிகளின் ஆற்றல் குறைந்திருக்கலாம்'

1 mins read
850b18c0-ab70-4e79-bc8d-7b7fa329adae
-

வாஷிங்­டன்: ஃபைசர், மொடர்னா ஆகிய நிறு­வ­னங்­க­ளின் கொவிட்-19 தடுப்­பூ­சி­க­ளின் ஆற்­றல் கடந்த சில மாதங்­களில் குறைந்­தி­ருக்­கக்­கூ­டும் என்று அமெ­ரிக்­கா­வின் 'சிடிசி' எனப்­படும் நோய்க் கட்­டுப்­பாடு, தடுப்பு நிலை­யம் தெரி­வித்­துள்­ளது.

இத­னைத் தொடர்ந்து கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த வரும் மாதங்­களில் மூன்­றா­வது தடுப்­பூசி தேவைப்­படும் என்று நிலை­யம் கூறி­யது. தான் வெளி­யிட்ட மூன்று ஆய்­வு­க­ளின் முடி­வு­களில் அதற்­கான தேவை ஆதாரத்­து­டன் தெரி­வ­தாக அது சொன்­னது.

அதே­போல், பிரிட்­டிஷ் அர­சாங்­கம் நடத்­திய ஓர் சுகா­தார ஆய்வி­லும், ஃபைசர், மொடர்னா, ஆஸ்ட்ரஸெ­னெகா தடுப்பூசி­களின் டெல்டா வகை கொவிட்-19 கிருமித்­தொற்­றைத் தடுப்­ப­தற்­கான ஆற்­றல் குறைந்­துள்­ளது தெரி­ய­வந்­தது.

இதற்­கி­டையே, அமெ­ரிக்­கா­வில் ஃபைசர், மொடர்னா தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக்­கொண்­டோர், அடுத்த மாதம் 20ஆம் தேதி­யி­லி­ருந்து மூன்­றாம் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ள­லாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

புதிய வகை கொவிட்-19 கிருமி­க­ளி­ட­மி­ருந்து தங்களைப் பாது­காத்­துக்­கொள்ள மூன்­றா­வது தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வ­து­தான் ஆகச் சிறந்த வழி என்று அமெரிக்க அதி­பர் ஜோ பைடன் கூறி­யுள்­ளார்.