கொவிட்-19: மூலிகை தீர்வு

கொவிட்-19: மூலிகை தீர்வு

1 mins read
840dd422-f7e9-44ff-9219-1a2146e7ccf6
-

பேங்­காக்: கொவிட்-19 கிரு­மித்­தொற்றால் பெரிய அள­வில் பாதிக்­கப்­ப­டாத நோயா­ளி­க­ளுக்கு மூலிகை மருந்­தைக் கொண்டு சிகிச்­சை­ய­ளிக்­கும் முயற்­சி­யில் தாய்­லாந்து இறங்­கி­யுள்­ளது. ஃபா டலாய் என்­ற­ழைக்­கப்­படும் சுவைப்­ப­தற்­குக் கசப்­பாக இருக்­கும் இந்த மூலிகை, உட­லின் எதிர்ப்பு சக்­தியை அதி­க­ரிக்க உத­வும் எனச் சொல்­லப்­ப­டு­கிறது.

தாய்­லாந்­தில் 10 விழுக்­காட்டுக்கும் குறை­வா­னோ­ருக்கு மட்­டுமே இது­வரை தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது.

அதோடு, கொவிட்-19 நோயா­ளி­களுக்கு சிகிச்­சை­ய­ளிக்க அந்­நாட்­டின் மருத்­து­வத் துறை பெரி­தும் சிரமப்­பட்டு வரு­கிறது. இத­னைத் தொடர்ந்து மூலி­கைத் தீர்­வின் பக்­கம் அந்­நாட்டின் கவ­னம் திரும்பி­யுள்­ளது. எனினும், ஃபா டலாய் மருந்தை அதிக அளவில் உட்கொள்ளவேண்டும் என்று மக்கள் எச்சரிக்கப்படுகின்றனர்.