வெல்லிங்டன்: நியூசிலாந்தில் மீண்டும் கொவிட்-19 கிருமித்தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்ற கேள்விக்குப் பதில் கிடைத்துவிட்டதாக அந்நாட்டுப் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் கூறியுள்ளார். ஆக்லாந்தில் அண்மையில் ஒருவருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது.
ஆறு மாதங்களில் முதன்முறையாக நியூசிலாந்தில் ஏற்பட்ட முதல் கிருமித்தொற்றுச் சம்பவம் இது.
அவருக்குத் தொற்றியது ஆஸ்திரேலியாவில் பரவிவரும் டெல்டா வகை கொவிட்-19 கிருமி என்றும் இம்மாதம் ஏழாம் தேதியன்று சிட்னியிலிருந்து வந்த ஒருவரிடமிருந்து கிருமி பரவியதாகவும் தெரியவந்துள்ளது. முதலில் அஞ்சப்பட்டதுபோல் கிருமி, சமூக அளவில் அதிகம் பரவவில்லை எனத் திருவாட்டி ஆர்டன் கூறினார்.
நியூசிலாந்தில் தற்போது நடைமுறைப்டுத்தப்பட்டுள்ள முடக்கநிலை இன்று முடிவுக்கு வரவுள்ளது. அதை நீட்டிப்பது குறித்து நாளை முடிவெடுக்கப்படும்.

