கோலாலம்பூர்: 1எம்டிபி வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வராததால் முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் மீது உயர் நீதிமன்ற நீதிபதி கொலின் லாரன்ஸ் செக்குவெரா கடுங்கோபம் கொண்டார்.
சக நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நேற்று மன்னரைச் சந்திக்கச் சென்றதால் திரு நஜிப்பால் நீதிமன்றத்திற்கு வரமுடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
அதனால் மன்னர் சந்திப்புக்குப் பிறகு நேற்று மதியம் 2.30 மணிக்கு நீதிமன்ற விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

