வெலிங்டன்: நியூசிலாந்தில் கொவிட்-19 பாதிப்பு அதிகரித்துள்ளது.
நியூசிலாந்தின் ஆகப் பெரிய நகரமான ஆக்லாந்திலிருந்து தலை
நகர் வெலிங்டனுக்கு கொவிட்-19 கிருமி பரவியுள்ளது.
இதன் விளைவாக நடப்பில் உள்ள முடக்கநிலையை நியூசி லாந்துப் பிரதமர் ஜெசிண்டா
ஆர்டன் நீட்டித்துள்ளார்.
பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு, நியூசிலாந்தில் மீண்டும் ஒருவருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, செவ்வாய்க்கிழமையன்று நாடுதழுவிய தீடீர் மூன்று நாள் முடக்கநிலையை அவர் அறிவித்தார்.
கடந்த சில மாதங்களாக நியூசி லாந்தில் கொவிட்-19 பாதிப்பும் அதை எதிர்கொள்ளத் தேவையான கட்டுப்பாடுகளும் இல்லாமல் நியூசிலாந்து மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
ஆனால் கொவிட்-19 கிருமி தற்போது மற்ற நகரங்களுக்குப் பரவியிருப்பதால் இம்மாதம் 24ஆம் தேதி நள்ளிரவு வரை முடக்கநிலை நீட்டிக்கப்படுவதாக பிரதமர்
ஆர்டன் தெரிவித்தார்.
இந்த டெல்டா கிருமி வகை பரவல் எத்தகைய பாதிப்பை ஏற்
படுத்தும் என்று இன்னும் தெரியவில்லை," என்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
நியூசிலாந்தில் நேற்று மேலும் 11 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்களில் மூன்று பேர் தலை
நகர் வெலிங்டனைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மூவரும் அண்மையில் ஆக்லாந்துக்குப் பயணம் செய்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
"நாட்டு மக்கள் அனைவரும் இப்போது விழிப்புடன் இருக்க வேண்டும்," என்றார் திருவாட்டி ஆர்டன். ஆக்லாந்தில் நடைமுறைப்
படுத்தப்பட்டுள்ள முடக்கநிலை
நீட்டிக்கப்படக்கூடும் என்று நியூசிலாந்து சுகாதாரத் துறைத் தலைவர் ஏஷ்லி புளூம்ஃபீல்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து, நியூசிலாந்தின் எல்லைகளை மூடி, கிருமிப் பரலைக் கட்டுக்குள் கொண்டு வந்த திருவாட்டி
ஆர்டனுக்குப் பாராட்டுகள் குவிந்தன. ஆனால் தற்போது தடுப்பூசி போடும் திட்டம் தாமதமடைந்
திருப்பதாலும் விலைவாசி அதி
கரித்திருப்பதாலும் அவரது அரசாங்கத்துக்கு எதிராக அதிருப்திக் குரல்கள் எழுந்துள்ளன.
நியூசிலாந்தின் 5.1 மில்லியன் மக்கள் தொகையில் வெறும் 19 விழுக்காட்டினருக்கு மட்டும் முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

