கோலாலம்பூர்: திரு இஸ்மாயில் சப்ரி மலேசியாவின் பிரதமராகியிருப்பதை ஏற்றுக்கொள்ளுமாறு மலேசியாவின் எதிர்க்கட்சித் தலைவரான திரு அன்வார் இப்ராஹிம் தமது 'பக்கத்தான் ஹரப்பான்' கூட்டணியின் தலைவர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது, அடுத்த பொதுத் தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சி இன்னும் கடினமாக உழைப்பதற்காக விடுக்கப்பட்ட சவால் எனத் திரு அன்வார் குறிப்பிட்டார்.
மக்களின் நலனுக்காக கொவிட்-19 பிரச்சினையும் மலேசியாவின் பொருளியலும் நன்கு கையாளப்படவேண்டும்.
அதற்காகத் தங்களால் முடிந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

