கோலாலம்பூர்: மலேசியாவில் புதிதாக கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.
அங்கு புதிதாக 22,262 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது. நேற்று முன்தினம் ஒரு நாளைக்கு இதுவரை இல்லாத அளவில் எண்ணிக்கை 23,564ஆகப் பதிவானது.
சிலாங்கூர் மாநிலத்தில்தான் தொடர்ந்து ஆக அதிகமானோருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டு வருகிறது.
மலேசியாவில் கிருமித்தொற்று கட்டுப்பாடுகள் கட்டங்கட்டமாகத் தளர்த்தப்பட்டுவருகின்றன.
நேற்றைய நிலவரப்படி மலேசியாவில் இதுவரை மொத்தம் 1,535,286 பேருக்கு கொவிட்-19 கிருமி பரவியுள்ளது.
13,000க்கும் அதிகமானோர் மாண்டுவிட்டனர்.

