நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரம் உட்பட அதன் கிழக்குக் கடற்கரைப் பகுதியை ஹென்ரி எனப் பெயரிடப்பட்டுள்ள சூறாவளி தாக்கவுள்ளது. பலத்த காற்று வீசக்கூடும் என்றும் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புயல், 30 ஆண்டுகளில் அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து பகுதியைத் தாக்கவுள்ள முதல் சூறாவளி. கடைசியாக 1991ஆம் ஆண்டில் பாப் எனப் பெயரிடப்பட்ட சூறாவளி நியூ இங்கிலாந்தைத் தாக்கியது.

