சுகாதார ஊழியர்களுக்கு உரியதைத் தர உத்தரவு

சுகாதார ஊழியர்களுக்கு உரியதைத் தர உத்தரவு

1 mins read
92f502d4-03a9-47f6-84e5-ae152cf5b4d6
குவெசோன் நகரில் சிகிச்சை கூடமாக மாற்றப்பட்டுள்ள மருத்துவமனை ஒன்றில் அமைந்திருக்கும் தேவாலயம். படம்: ராய்ட்டர்ஸ் -

மணிலா: பிலிப்­பீன்­சில் சுகா­தார ஊழி­யர்­க­ளுக்­குத் தர­வேண்­டிய கட்­ட­ணச் சலு­கை­களை வழங்க ஏற்­பாடு செய்­யு­மாறு அந்­நாட்­டின் சுகா­தார மற்­றும் வர­வு­செ­ல­வுத் துறை அமைச்­சு­க­ளுக்கு அதி­பர் ரோட்­ரிகோ டுட்­டார்டே உத்­த­ர­விட்­டுள்ளார். கட்டணங்களைச் செலுத்த அவர் இந்த அமைச்சுகளுக்கு 10 நாட்கள் அவகாசம் தந்துள்ளார். வேலை­யி­லி­ருந்து வில­கப்­போ­வ­தா­கப் பாதிக்­கப்­பட்ட தாதி­ய­ரும் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­ப­டப்­போ­வ­தாக ஊழி­ய­ர­ணி­களும் விடுத்த மிரட்­ட­லைத் தொடர்ந்து இவ்­வாறு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

"அவர்­க­ளுக்­குப் பணத்­தைக் கொடுங்­கள். எவ்­வ­ளவு பணம் இருக்­கி­றதோ அதைப் பயன்­ப­டுத்­துங்­கள்," எனத் திரு டுட்­டார்டே பிலிப்­பீன்­சின் சுகா­தார அமைச்சர் ஃபிரான்­சிஸ்கோ டுக்­கே­யி­டம் கூறி­னார். பிலிப்­பீன்­சில் கொவிட்-19 பிரச்­சி­னை­யைக் கட்­டுப்­ப­டுத்த அந்­நாட்­டின் சுகா­தார அமைச்சு இது­வரை சுமார் ஒரு பில்­லி­யன் அமெ­ரிக்க டால­ருக்­கும் அதி­க­மான தொகை­யைச் செலவு செய்துள்ளது.

அதன் தொடர்­பி­லும் சுகா­தார ஊழியர்­களைச் சேர­வேண்­டி­ய­தைத் தரு­வது குறித்­தும் கேள்­வி­கள் எழுப்­பப்­பட்டு வந்­துள்ளன.

டெல்டா வகை கொவிட்-19 கிருமி நாடு முழு­வ­தும் மோச­மா­கப் பர­வி­வ­ரும் வேளை­யில் சுகா­தார ஊழி­யர்­கள் அது­வும் குறிப்­பாக தாதி­யர் பணி­யில் ஈடு­படா­மல் இருப்­பது கவலை தரும் ஒன்­றாக உரு­வெ­டுத்­துள்­ளது என்ற அச்­சம் பிலிப்பீன்­சில் எழுந்­துள்­ளது.

சென்ற ஆண்டு பிலிப்­பீன்­சின் தனி­யார் மருத்­து­வ­ம­னை­களில் சுமார் 40 விழுக்­காட்டு தாதி­யர் வேலை­யி­லி­ருந்து வில­கி­ய­தாக அந்­நாட்­டின் தனி­யார் மருத்து­வ­ம­னை­கள் சங்­கம் தெரி­வித்­தது.

பொது மருத்­து­வ­ம­னை­களும் இத்­தகைய சவால்­களை எதிர்­நோக்­கு­கின்றன.