எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட இஸ்மாயில் வலியுறுத்து

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட இஸ்மாயில் வலியுறுத்து

2 mins read
dee1357f-510f-47f7-b0bf-ad33124f7ed0
பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப். கோப்புப்படம் -

கோலாலம்பூர்: மலேசியாவின் புதிய பிரதமராக நேற்று தனது முதல் உரையை நிகழ்த்திய இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கொவிட்-19 தொற்றுநோயை சமாளிக்கும் முயற்சியில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்த அவர், தேசிய மீட்சி மன்றத்திலும் கொவிட்-19 சிறப்புக் குழுவிலும் எதிர்கட்சியினருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார்.

அனைத்து அரசியல்வாதிகளிடமும் ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்த அவர், நாடு கொவிட்-19 நெருக்

கடியை எதிர்கொண்டு வரும் சூழலில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான எந்தவொரு முயற்சியை கைவிடுமாறும் அவர் வலியுறுத்தினார்.

மூன்று ஆண்டுகளில் மூன்றாவது முறையாக தலைமைத்துவ மாற்றம் கண்டுள்ள, மலேசியாவின் பிரதமராக இஸ்மாயில் சனிக்

கிழமையன்று பொறுப்பேற்றார்.

அதன் பிறகு நேற்று மாலை அவர் நிகழ்த்திய 15 நிமிட உரையில், "நம் நாடு மீண்டு வருவதற்கு உதவும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும்.

"வேறுபாடுகளை மறந்து நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம். நம்முடைய 'மலேசிய குடும்பத்தின்' பாதுகாப்பிற்காக ஒருமித்த கருத்தை உருவாக்குவதை நோக்கி நாம் செயல்படுவோம்," என்று பேசினார்.

முந்தைய முகைதீன் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிரான உத்திகள் தொடர்ந்து பின்பற்றப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் இந்த உரையை அவரது கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் வரவேற்றனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு என்ன பொறுப்புகள் வழங்கப்படும் என்ற விவரங்கள் தெரியவில்லை என்றாலும் எதிர்க்கட்சியான

ஜனநாயக செயல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் ஓங் கியன் மிங், இஸ்மாயில் அளித்துள்ள வாய்ப்புகள் 'ஒரு நல்ல தொடக்கம்' என்று கூறினார்.