தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்கும் ஆசிரியர்களுடன் ஜோகூர் கலந்தாலோசனை

தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்கும் ஆசிரியர்களுடன் ஜோகூர் கலந்தாலோசனை

1 mins read
a72d34e2-ea65-4333-b435-c25d77bbd4a7
-

ஜோகூர்: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தயங்கும் சுமார் 779 ஆசிரியர்களுடன் கலந்தாலோசனை நடத்தப்படவுள்ளதாக ஜோகூர் கல்வி, தகவல், கலாசார குழுவின் தலைவர் மஸ்லான் புஜாங் கூறினார்.

மாநில அரசாங்கம் ஆசிரியர்

களுடன் தனித்தனியாக கலந்தாலோசனை நடத்தி தடுப்பூசி பற்றிய தகவல்கள் அவர்களுக்குத் தெளிவாக்கப்படும் குறிப்பாக, வரும் அக்டோபர் மாதம் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படவுள்ளதால், தடுப்பூசி எந்த அளவுக்கு முக்கியம் என்பது அவர்களுக்கு விளக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

ஆகஸ்ட் 19ஆம் தேதி நில

வரப்படி, ஜோகூரில் சுமார் 96.26 விழுக்காட்டு ஆசிரியர்கள் முதல் தடுப்பூசியும் 50,29 விழுக்காட்டு ஆசிரியர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள தாகவும் அவர் சொன்னார்.

அதோடு மலேசியாவின் ஒட்டுமொத்த பெரியவர்கள் மக்கள்

தொகையில் 54.3 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக தடுப்பூசி விநியோகத்திற்கான சிறப்பு குழு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, நேற்று மலேசியாவில் 19,807 பேர் தொற்றுக்கு ஆளாகினர்.

இதையடுத்து அங்கு கிருமித் தொற்றுக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை 1,555,093ஆக

உள்ளது.