கிருமித் தொற்று: கிள்ளான் மூத்தோர் காப்பகத்தைச் சேர்ந்த 17 பேர் மாண்டனர்

கிருமித் தொற்று: கிள்ளான் மூத்தோர் காப்பகத்தைச் சேர்ந்த 17 பேர் மாண்டனர்

1 mins read
0de9a2d2-5eed-4447-bf64-ba557f19b890
-

கிள்ளான்: கிருமித்தொற்று காரண மாக மலேசியாவில் மூத்தோர் காப்பகம் ஒன்றைச் சேர்ந்த 17 பேர் மாண்டுவிட்டனர்.

சிலாங்கூரின் கிள்ளான் பகுதி யில் உள்ள தனியார் மூத்தோர் காப்பகத்தில் உள்ள 24 பேர் மற்றும் ஆறு ஊழியர்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

தொற்று உறுதி செய்யப்பட்டவுடன் மூன்று ஊழியர்கள் அங்கிருந்து ஓடிவிட்டது அச்சத்தைக் கிளப்பியதோடு, காப்பகத்தின் நிலைமையை மிகவும் மோசமடைய செய்துவிட்டது.

இதைப் பற்றி அறிந்த மாவட்ட சுகாதாரத் துறை காப்பகத்திற்கு தேவையான உதவிகளைச் செய்து வருகிறது.

அங்கு வசிப்பவர்கள் அனைவரும் 70 முதல் 90 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் மூன்று வாரங்களுக்கு முன்னர் முதல் நபர் மாண்டதாகவும் காப்பக உரிமையாளர் சொன்னார்.

மேலும் காப்பகத்தின் மூத்தோர் யாரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வில்லை என்பதும் தெரியவந்துள்ளது.