மெக்சிக்கோவை சூறையாடிய கிரேஸ் சூறாவளி

மெக்சிக்கோவை சூறையாடிய கிரேஸ் சூறாவளி

1 mins read
797c58c4-983f-4d46-ac48-a5cf06bb0d6b
-

மெக்சிகோ சிட்டி: கிரேஸ் சூறாவளியால் சூறை யாடப்பட்ட மெக்சிகோ வில் எட்டு பேர் மாண்டு விட்டனர். மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய பலத்த காற்றுடன் கனமழையும் பெய்ததால் பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்தது.

குறிப்பாக, அந்நாட் டின் வெராகூரூஸ் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. சூறா வளியால் பல்வேறு வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. கனமழையால் பல்வேறு வீடுகள் இடிந்து விழுந் தன.

மேலும், நகரின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேறோடு சாய்ந்துவிட்டதால், மின்தடை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மெக்சிகோவில் ஏற்பட்ட சூறாவளியில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உட்பட 8 பேர் உயிரிழந்த னர். ஒருவர் மேற்கூரை இடிந்து விழுந்தும் சிறுமி ஒருவர் நிலச்சரிவில் சிக்கியும் உயிரிழந்தனர்.

மேலும், பலர் படு

காயம் அடைந்துள்ளனர். புயலால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணி கள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.

ஆறுகள் நிரம்பி வரு வதாலும் வெள்ள அபா யம் நிலவுவதாலும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது.