'இந்தியாவில் மூன்றாவது கொரோனா அலை அக்டோபரில் உச்சம் தொடும்'

'இந்தியாவில் மூன்றாவது கொரோனா அலை அக்டோபரில் உச்சம் தொடும்'

1 mins read
27fc2b9e-a1d2-41be-b70d-39625e053c97
படம்: இபிஏ -

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் மூன்றாவது அலை அக்டோபரில் உச்சமடையும் என தேசிய பேரிடர் மேலாண்மை மையம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக அம்மையம் மத்திய அரசிடம் விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சின் கீழ் இயங்குகிறது தேசிய பேரிடர் மேலாண்மை மையம். அண்மையில் மேற்கொண்ட ஆய்வின் மூலம், இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை உச்சமடையும் போது பெரியவர்களைப் போலவே குழந்தைகளும் அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரியவந்துள்ளதாக அம்மையம் எச்சரிக்கை மணி அடித்துள்ளது.

"ஒருவேளை மூன்றாவது அலை உச்சமடையும் பட்சத்தில் அதனை எதிர்கொள்ள இந்தியாவில் போதுமான முன்னேற்பாடுகள் இல்லை. மருத்துவர்கள், பணியாளர்கள், செயற்கை சுவாசக் கருவிகள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் என இப்போது இருக்கக்கூடிய ஏற்பாடுகள் எதுவும், மூன்றாவது அலையைச் சமாளிக்கத் தேவைப்படும் அளவுக்கு இல்லை. குழந்தைகளும் அதிக அளவில் பாதிக்கப்படும்போது நிலைமை மோசமடையக்கூடும்," என பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் தேசிய பேரிடர் மேலாண்மை மையம் குறிப்பிட்டுள்ளது.

எனவே குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர்.