காபூல்: காபூலிலிருந்து வெளியேற்றும் பணி எவ்வளவு விைரவில் முடிகிறதோ அவ்வளவு நல்லது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
இம்மாதம் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் அனைவரையும் வெளியேற்ற வேண்டும் என்று தலிபான் படையினர் காலக்கெடு விதித்துள்ளனர். இந்தக் காலக்கெடுவை மீறினால் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆனால் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குப் பிறகும் அமெரிக்கப் படைகள் அங்கு தங்கியிருந்தால் வெளியேற்றும் பணி முழுமையாக நிறைவேறும் என்று அவை கூறுகின்றன.
ஆனால் தனது திட்டத்தில் அதிபர் பைடன் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில அமெரிக்கத் துருப்புகள் ஏற்கெனவே மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. இதனால் மக்களை வெளி ேயற்றும் பணி பாதிக்கப்படவில்லை என்று அமெரிக்க ஊடகங்கள் குறிப் பிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தான் ஒன்பது நாட்களுக்கு முன்பு தலிபான் படையிடம் வீழ்ந்த பிறகு இதுவரை 70,700 பேர் காபூலிலிருந்து வெளி யேற்றப்பட்டுள்ளனர்.
"எங்களுடைய மக்கள் வெளி யேற உதவும் நடவடிக்கைகளை தலிபான் எடுத்து வருகிறது," என்று ஜோ பைடன் தெரிவித்தார்.
"ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் நீண்டநாள் தங்கியிருந்தால் தாக்கப்படும் அபாயமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது," என்றார் அவர்.
இதற்கிடையே காலக்கெடுவை நீட்டிப்பதில் அமெரிக்க அதிபரை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான் சன் தோல்வியடைந்துள்ளார்.
'ஜி7' தொழில்மய நாடுகளின் மாநாடு பிரிட்டன் தலைமையில் நடைபெறுகிறது.
அதன் தலைவர்கள், அமெரிக்க அதிபரை சம்மதிக்க வைப்பதற்காக மெய்நிகர் வழியாக அவசரமாகக் கூடி விவாதித்தனர்.
வெளிநாட்டவர்களையும் பாதிக் கப்படக்கூடிய ஆப்கான் நாட்டவர் களையும் வெளியேற்ற அவகாசம் தேவைப்படுவதாக கூட்டத்தில் பங் கேற்ற நாடுகள் தெரிவித்தன.
ஆனால் ஜோ பைடனிடம் போரிஸ் ஜான்சனின் செல்வாக்கு பலிக்கவில்லை.

