செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
748dc62a-78ca-438d-93cb-4c5ebeeb76f0
-
Google News Preferred Icon

விசித்திர நோயால் கவலை

வாஷிங்டன்: அமெரிக்கா, விவரிக்க முடியாத ஹவானா எனும் விசித்திர நோயால் கவலை அடைந்துள்ளது.

அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் வியட்னாம் செல்வதற்கு முன்பு ஹனோயில் உள்ள இரு அமெரிக்கத் தூதர்கள் அந்த விசித்திர நோயால் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் சிங்கப்பூரிலிருந்து வியட்னாமுக்குப் புறப்பட்ட கமலா ஹாரிஸின் பயணம் சில மணி நேரம் தாமதமானது.

ஜப்பானில் திடீர் தாக்குதல்

தோக்கியோ: தோக்கியோ சுரங்க ரயில் நிலையத்தில் மர்ம நபர்கள் அமிலத்தை ஊற்றி திடீர் தாக்குதல் நடத்தியதால் இருவர் காயம் அடைந்தனர். தோக்கியோவில் பலத்த பாதுகாப்புகளுக்கு இடையே பாராலிம்பிக்ஸ் தொடங்கிய செவ்வாய் இரவு ஷிரோகேன் டகனாவா ரயில் நிலையத்தில் தாக்குதல் நடைபெற்றதாக போலிசார் கூறினர். மர்ம நபர்களுக்கு போலிசார் வலை வீசியுள்ளனர்.

சிட்னியில் தொற்று அதிகரிப்பு

சிட்னி: சிட்னி நகரில் இதுவரை இல்லாத அளவுக்கு தொற்று அதிகரித்துள்ளதால் அந்நகர சுகாதார அதிகாரிகள் தடுமாறி வருகின்றனர். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 919 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.