பெய்ஜிங்: சீனாவை உலுக்கிய அலிபாபா குரூப் ஹோல்டிங்சின் முன்னாள் நிர்வாகி தொடர்பான பாலியல் வழக்கில் முதல் முறையாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து சீனாவின் தொழில்நுட்பத் துறையில் பாலியல் விவகாரம் சூடுபிடித்துள்ளது.
அநாகரிகமாக நடந்துகொண்ட சந்தேகத்தின்பேரில் ஜினான் ஹுவாலியன் பேரங்காடியில் பணியாற்றிய ஷாங் என்பவரை கைது செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டதாக ஜினான் நகர வழக்கறிஞர்கள் இணையத் தளத்தில் வெளியிடப்பட்ட தகவலில் தெரிவித்தனர்.
கடந்த ஜூலை மாதம் அலிபாபா பெண் ஊழியருடன் ஷாங் விருந்தில் பங்கேற்றார். அப்போது தமது முதலாளியால் பாலியல் தொந்தரவு களுக்கு ஆளானதாக பெண் ஊழியர் புகார் செய்திருந்தார்.
பெண் ஊழியரின் புகார் சமூக ஊடகங்களில் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அந்த நிர்வாகி வேலையிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்த வழக்கு குறித்து பேசிய போலிசார், ஷோவ் என்று அழைக்கப் படும் பெண்ணிடம் அவர் வலுக் கட்டாயமாக அநாகரிகமாக நடந்து கொண்டதாக தெரிவித்தனர்.
அந்தப் பெண் அளவுக்கு அதிக மாக குடித்து வாந்தி எடுத்தபோது உடன் சென்ற சந்தேக நபர் அதே குற்றத்தை மீண்டும் புரிந்ததாகவும் போலிசார் கூறினர்.
இந்தச் சம்பவத்தினால் வாடிக் கையாளர்களுடன் சேர்ந்து பெண்கள் மதுபானம் குடிக்க கட்டாயப்படுத்தப்படுவதாகக் கூறப் பட்டது.
இதனால் வர்த்தகம் தொடர் பிலான மதுபான விருந்துகளை குறைக்கப்போவதாக சீன கம் யூனிஸ்ட் அரசாங்கத்தின் ஊழல் தடுப்புப் பிரிவு அண்மையில் அறிவித்தது.

