அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ், சீனா மீது கூடுதல் அழுத்தத்தைத் தர தென்கிழக்காசிய நாடுகளைக் கேட்டுக்கொண்டார். வியட்னாமின் அதிபருடனான சந்திப்பில் திருவாட்டி ஹாரிஸ் இவ்வாறு கூறினார்:
"வெளிப்படையாகச் சொல்லவேண்டுமானால் பெய்ஜிங்கை கடல் சட்டங்கள் குறித்த ஐக்கிய நாட்டு நடைமுறைகளுக்கு உட்படும்படியான நெருக்குதலைக் கொடுக்கும் வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த நெருக்குதலை உயர்த்தி, பிற நாடுகளை அடக்கி தனது சொந்த அதிகாரத்தை நிலைநாட்ட முயலும் சீனாவின் போக்கிற்குச் சவால் விடுக்கவேண்டும்," என்று திருவாட்டி ஹாரிஸ், ஹனோய் நகரில் ஆரம்பித்த கூட்டத்தின் தொடக்கத்தில் கூறினார்.

