ஆஸ்திரேலியாவில் 1,000 பேர் பாதிப்பு

ஆஸ்திரேலியாவில் 1,000 பேர் பாதிப்பு

2 mins read
515f1bdd-4d3f-4837-8dbd-692e900f388f
சிட்னி கிளென்வுட் புறநகரில் உள்ள சீக்கிய கோயிலில் தடுப்பூசி போடுவதற்காக சீக்கிய சமூகத்தின் பெயர்களை சுகாதார அதிகாரி ஒருவர் பதிவு செய்தார். படம்: ஏஎஃப்பி -

சிட்னி: ஆஸ்­தி­ரே­லி­யா­வில் கிரு­மித் தொற்­றுச் சம்­ப­வங்­கள் புதிய உச்­சத்­தைத் தொட்­டுள்­ளன. நேற்று ஒரு நாள் மட்­டும் புதி­தாக ஆயி­ரம் பேருக்­குத் தொற்று இருப்­பது உறுதி செய்­யப்­பட்­ட­தாக உள்­ளூர் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

சிட்னி நக­ரில் கொவிட்-19லிருந்து உரு­மா­றிய டெல்டா கிருமி கட்­டுக்­க­டங்­கா­மல் பரவி வரும் வேளை­யில் புதிய தொற்­றுச் சம்­பவங்­க­ளின் எண்­ணிக்கை ஆயிரத்­தைத் தாண்­டி­யுள்­ளது.

மக்­கள் அதி­கம் வசிக்­கும் சிட்னி நகரை உள்­ள­டக்­கிய நியூ சவுத் வேல்ஸ் மாநி­லத்­தில் மட்­டும் முந்­தைய 24 மணி நேரத்­தில் இது­வரை இல்­லாத அள­வுக்கு 1,029 தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கி­உள்­ளன. மூவர் மாண்­டு­விட்­ட­னர்.

கடந்த ஜூன் மாதம் மத்­தி­யில் சிட்­னி­யில் கிரு­மிப் பர­வல் தலை தூக்­கி­யது. அதன் பிறகு நேற்று வரை மொத்­தம் 15,000 பேர் பாதிக்கப்பட்­டுள்­ள­னர். சிட்­னி­யி­லி­ருந்து மற்ற நக­ரங்­க­ளுக்­கும் தொற்று பர­வி­ய­தால் நாடு முடக்­கத்­திற்­குத் திரும்­பி­யது. ஆஸ்­தி­ரே­லி­யா­வின் மக்­கள் நெரி­சல்­மிக்க தென்­கி­ழக்கு வட்­டா­ரத்­தில் பய­ணத் தடை­கள் விதிக்­கப்­பட்­டன.

தொற்­றுச் சம்­பவங்­கள் தொடர்ந்து கூடி வரு­வ­தால் மருத்­து­ம­னை­ களுக்கு நெருக்­கடி ஏற் பட்டுள்ளது. இதற்கிடையே செப்­டம்­பர் மத்­தி­யில் தடுப்­பூசி போட்­டுக்கொண்­ட­வர்­க­ளுக்கு மட்­டும் கட்­டுப்­பா­டு­கள் மித­மான அள­வுக்குத் தளர்த்­தப்­படும் என்று நியூ சவுத் வேல்ஸ் மாநில முதல்­வர் கிளா­டிஸ் பெர­ஜிக்­லி­யான் அறி­வித்­துள்­ளார்.

தொற்று அதிக­மில்­லாத பகு­தி­களில் தடுப்­பூசி போட்ட ஐவர் ஒன்று­கூட அனு­ம­திக்­கப்­படுவர் என்றும் அவர் கூறி­யுள்­ளார்.

நியூ சவுத் வேல்ஸ் மாநி­லத்­தின் எட்டு மில்­லி­யன் மக்­க­ளுக்கு ஆறு மில்­லி­யன் தடுப்­பூசிகள் போட இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது.

"இது ஒன்­று­தான் வாய்ப்பு. நமது சமூ­கத்­தின் நல­னுக்­கும் மன­ந­லத்­துக்­கும் இதுவே சிறந்த வழி," என்று பெர­ஜிக்­லி­யான் குறிப்­பிட்­டார். சுகா­தா­ரத் துறை வச­தி­கள் மேம்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தால் கிரு­மித்­தொற்­றைச் சமா­ளிக்க முடி­யும் என்று கூறிய அவர், உதவி தேவைப்­ப­டு­வோர் அனை­வ­ருக்­கும் உதவி கிடைக்­கும் என்று உறு­தி அ­ளித்­துள்­ளார்.