கோலாலம்பூர்: புதிய பிரதமராக பொறுப்பு ஏற்றுள்ள இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று 11.00 மணிக்கு புதிய அமைச்சரவையை வெளியிடுவார் என்று நேற்று அவரது அலுவலகம் தெரிவித்தது.
பாகாங்கின் குவாந்தானில் நேற்று காலை மாமன்னரை பிரதமர் சந்தித்துப் பேசினார்.
அப்போது உத்தேச அமைச்சர் களின் பட்டியலை அவர் மன்னரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து புதிய அமைச்சரவை இறுதி செய் யப்பட்டதாகத் தெரிகிறது.
இதன் அடுத்தகட்டமாக இன்று புதிய அமைச்சர்களின் பட்டியலை பிரதமர் வெளியிடுவார் என்று பிரதமர் அலுவலகத்தின் அறிவிப்பு நேற்று மாலை வெளியானது.
வரும் திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணிக்குத் தொடங்கும் பதவி யேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் பதவியேற்றுக்கொள்வார்கள் என்று செய்தியாளர்களிடம் அலுவலகம் தெரிவித்தது.
ஏறக்குறைய 22 மாதங்கள் நீடித்த பக்கத்தான் ஹரப்பான், ஆட்சியிலிருந்து இறங்கிய பிறகு முகைதீன் யாசின் தலைமையில் பெரிக்கத்தான் நேஷனல் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது.
அதுவும் நம்பிக்கை வாக் கெடுப்பில் தோல்வியைத் தழுவ வேண்டியிருக்கும் என்பதால் திரு முகைதீன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்த ஆட்சியும் 17 மாதங்களில் முடிவுக்கு வந்தது.
இதையடுத்து அம்னோ கட்சி துணைத் தலைவரும் திரு முகை தீன் அரசாங்கத்தில் துணைப் பிரத மராகவும் இருந்த இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை புதிய பிரதமராக மாமன்னர் நியமித்தார்.
புதிய அமைச்சரவையில் எதிர்க் கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்கப் படுமா என்பது தெரியவில்லை. இருந்தாலும் தமது அரசாங்கத்துக்கு ஆதரவு அளிக்கும் கட்சிக்கு அவர் துணைப்பிரதமர் பொறுப்பு வழங் கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

