இந்தோனீசியாவில் முக்கிய பிரமுகர்கள் 3வது தடுப்பூசி போட்டுக்கொண்டதால் சர்ச்சை

இந்தோனீசியாவில் முக்கிய பிரமுகர்கள் 3வது தடுப்பூசி போட்டுக்கொண்டதால் சர்ச்சை

1 mins read
6788d085-800f-4ecf-9786-28bbef92da74
இந்தோனீசிய ராணுவத் தளபதி ஹாடி ஜஜான்டோ, கிழக்கு கலிமந்தான் ஆளுநர் இஸ்ரான் நூர் (வலம்). படங்கள்: ராய்ட்டர்ஸ், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வில் பல­ருக்கு முதல் அல்­லது இரண்­டா­வது தடுப்­பூ­சிக்கே வழி­யில்­லாத நிலை­யில் சில முக்கிய பிரமுகர்கள் 3வது முறை­யாக பூஸ்­டர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தாக அறி­வித்­துள்­ள­தால் அவர்­கள் கடு­மை­யான குறை­கூ­ற­லுக்கு ஆளா­கி­யி­ருக்­கின்­ற­னர்.

ராணு­வத் தள­பதி ஹாடி ஜஜான்டோ, கிழக்கு கலி­மந்­தான் ஆளு­நர் இஸ்­ரான் நூர் ஆகி­யோர் அதி­பர் ஜோக்கோ விடோ­டோ­வைச் சந்­தித்­த­போது 3வது தடுப்­பூசி போட்டுக்கொண்டதாக தெரி­வித்­த­னர்.

தற்­ச­ம­யம் சுகா­தா­ரத் துறை­யைச் சேர்ந்த ஊழி­யர்­க­ளுக்கு மட்­டும் பூஸ்­டர் தடுப்­பூசி போடப்­பட்டு வரு­கிறது.

இதற்­கி­டையே செவ்­வாய்க்­ கிழமை அன்று பொது நிகழ்ச்சி ஒன்­றில் பங்­கேற்­ப­தற்கு முன்பு அதி­பர் ஜோக்கோ விடோடோ சாதா­ர­ண ­மாக உரையாடிய காட்சி நேர­டி­யாக ஒளி­ப­ரப்­பப்­பட்­டது.

அப்­போது அதி­பர், தமக்கு 3வது தடுப்­பூசி போட­வில்லை என்­றார்.

பைசர்-பயோ­என்­டெக் ஊசிக்­கா­கக் காத்­தி­ருப்­ப­தா­க­வும் அவர் தெரி­வித்­தார். இந்­தக் காட்சி பின்­னர் அதி­கா­ர­பூர்வ ஒளி­வ­ழி­யி­லி­ருந்து அகற்­றப்­பட்­டது.

இந்­நி­லை­யில் 3வது தடுப்­பூசி போட்­டுக்கொண்­ட­தா­கக் கூறப் ­படு­வதை விமா­னப் படைத் தள­பதி மறுத்­துள்­ளார்.

மூல உயிரணு சிகிச்சைக்காக பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக அவர் விளக்க மளித்தார். ஆளுநர் இஸ்ரான் 3வது தடுப்பூசி போட்டது பற்றி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

அதிபர் மாளிகையும் இது பற்றி பேச மறுத்துவிட்டது.