வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில்இருந்து தப்பிச்செல்ல விரும்பிய ஆப்கான் கர்ப்பிணிப் பெண்ணுக்கு அமெரிக்க ராணுவ விமானத்திலேயே குழந்தை பிறந்தது. அந்தப் பெண் சிசுவுக்கு 'ரீச்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்ற சனிக்கிழமை ஜெர்மனியை நோக்கி விமானம் சென்றபோது தாயாருக்கு பிரசவ வலி ஏற்பட்டதாக நேற்று அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். விமானம் தரையிறங்கியதும் தாயும் சேயும் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 'ரீச்' என்பது அவர்கள் பயணம் செய்த 'ரீச் 828' எனக் குறிப்பிடப்படும் விமானத்தின் பெயராகும். கட்டுப்பாட்டு அறைகளுடன் அல்லது மற்ற விமானங்களுடன் தொடர்புகொள்ள இந்தப் ெபயர் பயன்படுத்தப்படுகிறது.
ரீச்சும் பெற்றோரும் மற்ற ஆப்கான் அகதிகளுடன் அமெரிக் காவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர் என்று அமெரிக்காவின் ஐரோப்பிய தளபத்தியத்தின் தலைவர் ஜெனரல் டோட் வோல்டர்ஸ் கூறினார்.

