செய்திக்கொத்து

1 mins read
10857dc7-a00f-41bf-85dc-86da784e21a0
-

மலேசியாவில் 393 மரணங்கள்

கோலாலம்பூர்: மலேசியாவில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 24,599 புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவானது. நேற்று ஒரு நாள் மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு 393 கொவிட்-19 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்கொரியாவில்

நிலைமை மோசம்

ஏர் ஏசியா பறக்கத் தயார்

கோலாலம்பூர்: ஏர் ஏசியா ஊழியர்கள் அனைவருக்கும் நூறு விழுக்காடு தடுப்பூசி போடப்பட்டுள்ளதால் எந்நேரமும் விமானங்கள் பறக்கத் தயாராக இருப்பதாக ஏர்ஏசியா தலைமை நிர்வாக அதிகாரி டோனி ஃபெர்னாண்டஸ் தெரிவித்தார்.

சோல்: தென் கொரியாவில் கொவிட்-19 நிலவரம் மேலும் மோசமடைந்துள்ளது. புதன்கிழமை ஒரு நாள் மட்டும் இருபது பேர் தொற்றுக்குப் பலியாகினர். இது, இவ்வாண்டில் இல்லாத ஆக அதிக மரண எண்ணிக் கையாகும். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 425 பேர் உடல்நிலை மோசமாகியுள்ளது. புதிதாக 1,882 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தென்கொரிய நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையம் நேற்று தெரிவித்தது.