நியூசிலாந்திலிருந்து சிங்கப்பூர் வருவோருக்கு கட்டுப்பாடுகள் கடுமையாகின்றன

நியூசிலாந்திலிருந்து சிங்கப்பூர் வருவோருக்கு கட்டுப்பாடுகள் கடுமையாகின்றன

1 mins read
53a135a6-32e4-41e2-b7d9-fef3e2f6be62
-

நியூசிலாந்தில் கொவிட்-19 தொற்று அதிகரிக்கிறது. இதனால் நியூசிலாந்திலிருந்து இங்கு வருவோருக்கு நாளை மறுதினம் (ஆகஸ்ட் 30) இரவு 11.59 மணி முதல் கட்டுப்பாடுகள் கடுமை யாகின்றன.

இங்கு வருவதற்கு முந்தைய 21 நாட்களுக்குள் நியூசிலாந்தில் இருந்திருக்கும் சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதிதாரர்கள் இங்கு தரை இறங்கையில் பிசிஆர் பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.

ஒரு வார காலம் தனித்து இருக்க வேண்டும். தனிமை உத்தரவு காலம் முடியும்போதும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படவேண்டும். இங்கு வருவதற்கு முந்தைய 21 நாட்களில் நியூசிலாந்தில் இருந்திருக்கும் குறுகிய கால பயணிகளுக்கு இங்கு அனுமதி கிடைக்காது என்று சுகாதார அமைச்சு தெரிவித்து உள்ளது.